தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 50

5) பதவி / ஆதாயம் அடைய வேண்டும் என்றால் உடனே தன் அடையாளத்தை மாற்றி கொள்வது : பிராமணர் ஒருவரை, தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு அரசியல் பாடம் பயின்று, கட்சியிலும் வளர்ந்துவிட்டு ; முதல்வர் பதவியை அடையவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காக ; பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற பிரிவினையை பேசினார். பச்சை தமிழர் என்ற அடையாளம் பூண்டார். மாநில தேர்தலில் திரு. சீனிவாசனிடம் தோற்ற பிற்ப்பாடு நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும்போது தன் பெயருக்கு பின் தன் சமுதாய அடையாள பெயரை சேர்த்துக் கொண்டார். 

இந்த வழக்கத்தை திரிவடுக கட்சிகள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகிறார்கள். அண்மைக்கால உதாரணம் வேண்டுமென்றால் மங்கூஸ் என்று பலராலும் புகழப்பட்டு வந்த மனுஷ்யபுத்திரன் இன்று அவருடைய மத அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய நிபந்தத்தில் ; தன் இயற் பெயரை முன்னிலைபடுத்துகிறார்.

6) தனக்கு பிடித்த நடிகர் / நடிகை என்றால் அரசியலில் சேரலாம் மற்றவர்கள் என்றால் கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசுவது.

நடிகர்களை அரசியலில் நுழையவிட்டு நாட்டை சீரழித்ததில் திரிவடுக கட்சிகளுக்கு எவ்வளவு  பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு திரு காமராசர் காங்கிரசுக்கும் உண்டு.

7) அடுத்த கட்சியில் பணக்காரன் நின்றால் அது பணக்காரர்கள் கட்சி என்பது அதே நேரத்தில் தன் கட்சியில் பணக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது.

8) தினத்தந்தி நாளிதழில் இப்போது வெளியிட்டிருக்கும் மீள் பதிவை பார்த்தால், காமராசர் ஆட்சியில் அரிசி பருப்பு போன்ற, அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு நிலவி இருக்கிறது கேட்க்கும் விலை கொடுத்தால் எல்லாமும் கிடைக்கும் என்ற நிலை. இந்த பதுக்கல் மற்றும் கருப்பு சந்தையை கட்டுப்படுத்த இயலாத கடத்தலுக்கு உடந்தையான ஒரு அரசாகவே காமராசரின் காங்கிரஸ் அரசு இருந்துள்ளது. 

இன்று வரை அந்த நிலைமை மாறவில்லை. பசுமை காய்கனி அங்காடி என்று ஊரை ஏமாற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment