தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 51

9) மோசடி / ஊழல் / கொலை குற்ற சாட்டு வந்தால் அதனை கடைசிவரை கண்டுபிடிக்காமல் யூகத்துக்கு விடுதல். அல்லது அதன் மூலம் அனுதாப ஆதாயம் அடைய முயல்வது.

கள்ள நோட்டின் வரிசை எண் உட்பட அனைத்து விபரங்களையும் கூறி முதல்வருக்கு அதில் பங்கு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தபோது அந்த குற்றசாட்டை விசாரணை செய்யாமல் இருந்தது காமராசரின் காங்கிரஸ் அரசு.   செய்திருப்பேன் என்று நம்புகிறீர்களா என்ற உணர்ச்சி வசனம் பதிலாக இருந்தது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லை.

அழகிரி மீதான குற்றசாட்டு போல முடிவுக்கு வராத அரசியல்  எவ்வளவு திரிவடுக ஆட்சியில்...

10) காமராசரின் காங்கிரஸ் அரசு காலனிகளை உருவாக்கியது. மதுரையில் மாட்டு தாவணி அருகில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கபட்டது இன்று போல அன்று போக்குவரத்து வசதிகள் கிடையாது. எல்லாரோடும் சேர்ந்து வாழ்வதற்கு ஏற்றார் போல ஊருக்கு உள்ளேயே  உருவாக்கலாமே. ஏன் ஊருக்கு வெளியே இடம் பெயர்த்தவேண்டும்? என்று சட்டசபையில் குரல்கள் எழுந்தது.

கலைஞர் சமத்துவபுரத்தை ஊருக்கு வெளியே உருவாக்கினார்.  காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்டவர்களை மட்டும்  ஊருக்கு வெளியே கொண்டுபோனால், அவர்கோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருப்பவர்கள் அனைவரும் ஊருக்கு வெளியே செல்லுங்கள் என்ற நிலையை உருவாக்கினார்.

11) இயற்க்கை வளங்களை அழித்தல் -  கர்ம வீரர் காமராசர் ஆட்சி காலத்தில் தான் சென்னையின் குப்பை, பள்ளிக்கரணை சதுப்பு நில காடுகளில் கொட்டும் வழக்கம் துவங்கியது.  அதனை திரிவடுக கட்சிகள் இம்மி பிசகாமல் கடை பிடித்தன..பெரும்பாலான நீர் நிலைகளை அழித்து விட்டார்கள். கோவையில் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று மரங்கள் அனைத்தையும்  வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.

No comments:

Post a Comment