பொன்னியின் செல்வன் நாடகம்



சென்னையிலும் மதுரையிலும் தவறவிட்டதால் கோவையில் இந்த நாடகத்தை பார்த்தோம். மாநகராட்சி அரங்கம் என்றால் சரியான பராமரிப்பு இருக்காது என்ற என்னத்தை பொய்ப்பித்தது. என்ன, கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார் நம்பி ஆகியோர் முதல் பத்து நிமிடங்களில் entry கொடுத்துவிடுகிறார்கள். இருவருக்குமே சரியான கரகோசம் கிடைத்தது. தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகம் நடித்தாக தெரியவில்லை. இருந்தும் அந்த குறை தெரியாதவாறு கதையையும் கதாபாத்திரத்தையும் நன்கு உள் வாங்கி நடித்திருந்தார்கள்.


அநேகமாக எல்லா பதிப்பகங்களும் பல பதிப்புகள் வெளியிட்டுவிட்டன. அநேகம் பேர் படித்தாகிவிட்டது. இதுதான் கதை என்பது அனைவருக்கும் தெரியும். கதையில் இருக்கும் எல்லா திருப்பங்களும் அத்துபிடி. அரசுடைமை ஆகிவிட்ட காவியம் என்பதால் விலை இல்லாமலே படிக்க கிடைகிறது. இருந்தாலும் நாடகத்தை பார்ப்பதில் யாருக்கும் ஆர்வம் குறையவில்லை. நாடகத்தை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக வெளிஊர்களில் இருந்து வருகிறார்கள்.


இப்போதெல்லாம் இரண்டேகால் மணி நேரத்துக்குள் முடியுமாறு படத்தை எடுத்து வெளியிடுகிறார்கள். அதில் கூட பாடல் காட்ச்சிகளுக்கு பலர் வெளியில் சென்றுவிடுகிறார்கள். இடைவேளைக்கு பிந்தைய நேரத்தில் சரியான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையாக இருந்தால் படத்தை பார்ப்பது இல்லையென்றால் தூங்கிவிடுவது என்ற நிலை தான் இருக்கிறது.


ஆனால் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடந்த இந்த நாடகத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது entry கொடுக்கும் ஆதித்ய கரிகால சோழனுக்கு அவ்வளவு கரகோசம் கிடைத்தது. பிரபலமான நடிகர் என்றால் ஒருவர் அல்லது இருவர் தான். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். 


திரை அரங்கங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. திருமண மண்டபங்களாக மாறி வருகின்றன. திருட்டு VCD மூலன் பெருத்த நட்டம். என்று தொடர்ந்து குறை படும் திரைத்துறையினர் படிக்க இதில் நிறைய பாடம் இருக்கிறது.

No comments:

Post a Comment