தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 40

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 40

தீயணைப்பு மற்றும் மின்துறையில் வேலை பார்ப்பவர்கள் பற்றி சொல்லவேண்டியது இல்லை. திட்டமிட்ட விடுமுறையை கூட கடைசி நேரத்தில் ரத்து செய்யவேண்டி வரும்.

உங்களின் கீழதிகாரியின் இயங்குதிறன் குறித்து கேள்விகேட்க முடியாது. கேள்வி கேட்டால் அது எப்படி வேண்டுமாலும் திரும்பலாம். பலர் சிறப்பாக இயங்கினாலும் சிலர் சிறப்பாக இயங்கவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனத்தின் மீதும் கெட்ட பெயர் உண்டாகும். BSNL சேவை குறைபாடு குறித்து பேசாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் பெருமழை வெள்ளம் சென்னைக்கு வந்தபோது அந்த நிறுவனத்தின் சேவை தொய்வின்றி இருந்தது. அடிக்கடி கோளாறு ஏற்ப்படுகிறது என்று அலுவலகத்தில் கேட்டால், களத்தில் பனி செய்பவர்கள் சரியில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் களத்தில் வேலை செய்பவர்களுக்கு தான் அதிக வேலை பளு. தனியார் நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அந்த துரையின் அமைச்சர் வாய்மொழி உத்தரவு போடுவார். அதனை செயல்படுத்தவில்லை என்றால் அந்த ஊழியரின் நிலைமை அவ்வளவு தான். அமைச்சர் / நிறுவனத்தின் மீதான குறையை நாம் கடைநிலை இடைநிலை ஊழியர்களிடம் தான் காட்டுவோம்.

வெள்ளம் / பூகம்பம் போன்ற இயற்க்கை சீற்றத்தால் வேறு மாநிலங்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவுவதற்காக சம்பளத்தில் இருந்து ஒரு நிதி தரவேண்டுமென்று அரசு ஊழியர் சங்கத்தில் முடிவாகும். அதே நிவாரண நிதிக்காக உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திலும் வசூல் செய்வார்கள். இரெண்டுக்கும் நீங்கள் தான் பணம் தரவேண்டும்.

தனியார் நிறுவனங்களில் ஒவ்வொருவரின் திறமையின் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு இருக்கும். ஆனால் அரசாங்க வேலை என்றால் மொத்த batch க்கும் கிடைக்கும் சில நேரங்களில் விரைவாகவும் பல நேரங்களில் காத்திருப்புக்கு பின் கிடைக்கும்... பதவி உயர்வுக்காக நீதிமன்றம் சென்றவர்கள் பலர். சத்தம் போடாமல் தங்கள் உரிமையை விட்டு கொடுத்தவர்கள் பலர்.

மாநகர பேருந்து ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் என்றாலே நமக்கு ஒரு வித எரிச்சல் மனோ நிலை தான். போதிய ஓய்வு கிடைக்கிறதா அவர்களுக்கு... அவர்கள் போராட்டம் செய்தால் நமக்கு கோபம் வருகிறது. வழியில் ஒரு மூதாட்டி பேருந்தை நிறுத்த சொன்னால்... நிறுத்தினாலும் குத்தம் நிருத்தலைனாலும் குத்தம்...

அண்ணா சாலையில் (மேம்பால உச்சியில்) சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு விபத்து... உடனே ஓட்டுனர் அலைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டியதால் தான் விபத்து ஏற்ப்பட்டது என்று செய்தி வெளியிட்டார்கள்... விசாரணை நடைபெற்றது ; துறை ரீதியான உதவிகள் கிடைக்க வில்லை... இறுதியாக ஓட்டுனர் இருக்கை பழுதாக இருந்ததால் விபத்து நடந்தது என்று தெரியவந்தது... பேருந்தை வாங்கும் போதே அதற்க்கான பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் போடாமல் விட்டுவிடுகிறார்கள்... அப்போதுதான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்க முடியும்...





No comments:

Post a Comment