சேதுபதி

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பகூடியவரை வேறு வழி மூலமாக தண்டிக்கும் மற்றுமொரு போலீஸ் ஸ்டோரி.

பண்ணையாரும் பத்மினியும் பட இயக்குனர் இந்த படத்துலையும் மென்மையான நல்லெண்ண உணர்வுகளை காட்சிபடுத்தி இருக்கிறார். போன படம் அவ்வளோ நல்லா இருந்தும் வணிகரீதியா சரியா போகல ஆனா இந்த படம் வணிக ரீதியா கண்டிப்பா வெற்றி அடையும்னு நினைக்குறேன்.

ஆகச்சிறந்த படம்னு சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா குடும்பத்தோடு பார்க்ககூடிய நல்ல படம்.




எதனால நல்ல படம்?

1) வில்லன்ல ஆரம்பிச்சு ஹீரோ வரைக்கும் யாருமே தம் அடிக்கல ; தண்ணி அடிக்கல.
2) தினத்தந்தி மேட்டர் எதுவுமே கிடையாது. (நீங்க நினைக்குறது தான்.)
3) சினிமாத்தனமே இந்த படத்துல இல்லைன்னு சொல்லமுடியாது ஆனா உச்சகட்ட மெலோட்ராமா கிடையாது.
4) இந்த படத்துக்காக ரொம்ப மெனக்கிடிருக்கேன்னு எந்த நடிகரும் நடிகையும் சொல்லல. கத்துகிட்ட வித்தைய முழுசா இறக்கீருக்கேன்குற ரேஞ்சுல இயக்குனர் எங்கேயும் பேசல.





இதனாலையே ஒரு படத்த நல்ல படம்னு சொல்லமுடியுமா? அது தான் இன்றைய தமிழ் சினிமாவின் இழி நிலை.

ஆனாலும் இந்த படத்துக்கு வேற நிறைய நல்ல விஷயம் இருக்கு.

1) பொதுவாவே போலிஸ் ஸ்டோரினா அந்த ஹீரோக்கு ஏதாவது சொந்த இழப்பு இருக்குனு காட்டுறதுக்காக குடும்பத்த சேர்ந்தவங்கள கொல்லுவாங்க இல்லைனா வேற ஏதாவது செய்யுவாங்க. ஆனா இந்த படத்துல ஒரு போலீஸ்காரர் சாகுராறு. அதையே தன்னுடைய சொந்த இழப்பா கதாநாயகன் பாக்குற மாதிரி காட்டீருக்காங்க. (கொசுறு தகவல் என்னனா அந்த சாகுற போலிஸ், கதாநாயகனோட க்ளோஸ் பிரெண்ட் கிடையாது)

2) டைட்டில் சாங்கல ஒரு போலிஸ் காரர் ஒரு பெட்டி கடைல தண்ணி குடிப்பாரு வாழைப்பழம் சாபிடுவாறு. நாம கூட அதுக்கு பணம் கொடுக்குற மாதிரி காட்டபோராங்கலோனு நினைக்கும் போது...

3) குடும்பத்தோட வெளில போரதுனாவே சினிமாவுக்கு / பார்க் / தீம் பார்க் / பீச் போறமாதிரி  காட்டுவாங்க. ஆனா இந்த படத்துல இருக்க குடும்பம் கோவிலுக்கு போறாங்க.

4) மைக் முன்னால மட்டுமே பெண் விடுதலை பேசுறவங்களுக்கும் இந்த படம் புடிக்கனும்னு எந்த சீனையும் சேர்க்கல.

5) வெளில மட்டும் fullest கொடுக்குற மாதிரி காட்டாம வீட்டுலையும் fullest கொடுக்குற மாதிரி காட்டீருக்காங்க.

6) கதாநாயகன் எதார்த்தமா செல்பி எடுக்குராப்ள.

7) வில்லனுக்கு பயங்கர catchy யா ஒரு சாங் வச்சிருக்காங்க. அட்டகாசமா இருக்கு.




இன்னும் கொஞ்சம் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணும் போது சாபிடுறத நிருத்திக்கனும்னு சொல்லுவாங்க. இந்த படம் முடிவடையும் போது இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமேன்னு  நினைப்பு வருது.

No comments:

Post a Comment