தமிழக தேர்தல் 2016 முன்னுரை




வாழ்க வளமுடன்.

தேர்தல் குறித்த அறிவிப்பு வந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் நடப்புக்கு வந்துவிட்டது. இன்னும் எந்த கட்சியும் தேர்தலுக்கு தயாரானது போல் தெரியவில்லை. சில வாரங்களில் அனல் பறக்கும் பரப்புரைகள் இருக்கும். 

பட்டாபி சீதாராமையாவின் வெற்றி என் வெற்றி என்று பேசிய காந்தியை போல / எல்லா தொகுதியிலும் என்னால் நிற்க முடியாது அதனால் மற்றவர்களை நிறுத்தி இருக்கிறேன். எல்லா தொகுதியிலும் நான் நிற்பதாக நினைத்து ஒட்டு போடுங்கள் என்றோ / இதுவே என் கடைசி தேர்தல் என்றோ சொல்லி தேர்தலை சந்திப்பார்கள். (தனிநபர்களை முன்னிறுத்துதல்)


இன்னாருக்கு ஓட்டுபோடுங்கள் இன்ன கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லாமல், கொள்கைகளை சொல்லி ; நல்லவர்களுக்கு மட்டும் ஓட்டுப்போடுங்கள் என்று பரப்புரை செய்த சில பெரியவர்களை பார்த்திருக்கிறோம். (கொள்கையை முன்னிறுத்துதல்)

என் பங்குக்கு தமிழக தேர்தல் 2016 பத்தி சில விடயங்களை இங்கு பகிர்கிறேன். தேர்தல் முடியும் வரை முதல் தொகுதி. தேர்தலுக்கு பின் இரண்டாவது தொகுதி. சுடும் உண்மைகள் இருக்கும். ஆனால் திகட்டும் அளவுக்கு புள்ளி விபரங்கள் இருக்காது.


காமராஜர் / காங்கிரசின் ஆட்சியை கொண்டுவருவோம்னு சிலர் சொல்லுறாங்க. அப்படீனா என்ன? அது சாத்தியமா? பச்சை தமிழன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன? சாதி கட்சினா என்ன ; திராவிட கட்சினா என்ன ; தேசிய கட்சினா என்ன.

ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களுக்குள் நான் எழுதக்கூடியதாகவும் ; 1-2 நிமிடங்களுக்குள் நீங்கள் வாசிக்க தக்கதாகவும் இருக்கும். 

எப்படி ஒரு திரைப்பட விமர்சனமானது அந்த திரைப்படத்தின் முதல் வார வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்துவது இல்லையோ அதுபோல தேர்தல் நேர அரசியல் கட்டுரைகளால் / தொலைகாட்சி விவாத நிகழ்சிகளால் தேர்தலின் போக்கை தீர்மானிக்க முடியாது.

வளர்க வையகம்.

No comments:

Post a Comment