தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 44

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 44

கடந்த 2006 ஆம் வருடத்தில் திமுக ஆட்சியை அமைத்தபோது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவுக்கு சென்று விட்டு தலைமைச் செயலகம் சென்றோம்.  அமைச்சர்கள் பெரும்பாலானோருக்கு scorpio வண்டியும் PA வும் தயாராக இருந்தது. சொல்லிவைத்தார் போல இரண்டு PA க்களில் ஒருவர் திரிவடுகர் (அரசியல் PA அல்லது  நிர்வாக PA).

அங்கே நான் கண்ட ஒரு காட்சியை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ; வெள்ளை சட்டை முழுவதும் நனைந்த நிலையில் கையில் ஒரு சால்வையை வைத்துக்கொண்டு யாரையோ தேடிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார். பலரிடம் விசாரித்துக் கொண்டு இருந்தார். இறுதியாக கிழக்கு பக்கம் இருந்து ஒரு பெண்மணி சில கரைவேட்டி மனிதர்கள் சூழ வந்தார். பெரியவர் அந்த பெண்மணியை   நெருங்கினார். அவர் உடல் மொழியில்  ஒரு மகிழ்ச்சி ; பணிவு ; வாஞ்சை தெரிந்தது.

விசாரித்ததில், அந்த பெண்மணி தான் அமைச்சராக பதவி ஏற்ற திருமதி. தமிழரசி என்பது தெரியவந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு அரசு பதவி ஏற்க்கும்போதும் இப்படி பட்ட காட்சிகளை பார்க்க முடியும் என்று அனுபவஸ்த்தர்கள் சொன்னார்கள். தன் ஊரை சார்ந்தவர் ; தன் இனத்தை சார்ந்தவர்  என்று ஏதோ ஒரு பிரியத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இப்படி பலரும் நெகிழ்கிரார்கள்.

ஆனால் பதவி ஏற்றுக்கொண்டவர்களிடம் அது போன்ற உணர்வு சிறிதும் இருப்பதில்லை. அதற்க்கு காரணம் எல்லோருக்கும் போதுவானவனாக இருப்பேன் என்று அவர்கள் எடுத்துக்கொள்ளும் பதவி பிரமாணம் கிடையாது. அவர்களின் முதலாளிகள் மீது அவர்களுக்கு இருக்கும் நன்றி உணர்ச்சிதான்.

2001 ல அதிமுக அரசு பதவி ஏத்துகிட்டபோது அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் திரு. பாண்டுரங்கன் கன்னத்துல போட்டுகிட்டது ரொம்ப பிரபலம். அந்த விழால திரு. அன்பழகனும் ஸ்டாலினும் கலந்துகிட்டாங்க. அந்த நிகழ்ச்சிக்கு  தபால் மூலமா வந்த அழைப்புல முன்னாள்  முதல்வர்னு போடாம சட்ட மன்ற உறுப்பினர் நு போட்டதால போகலைன்னு அரசியல் செஞ்சாரு கலைஞர். அந்த சட்டமன்றத்துல அதிமுக உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது செல்வி ஜெயலலிதாவுக்கு செஞ்ச அளவுக்கு அதிகமான மரியாதைய பகடி செய்யும் விதமா ஸ்டாலினுக்கு சாஷ்ட்டாங்க மரியாதை செய்தார் திமுகவின் பன்னீர்செல்வம்.

No comments:

Post a Comment