தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 43

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 43

"எந்த கட்சியா இருந்தாலும் பரவா இல்ல ஆனா வேட்பாளர் நல்லவரான்னு தான் நாம அவசியம் பாக்கனும்"னு நிறைய பேரு இன்னைக்கு பேச ஆரம்பிச்சிருக்காங்க. வேட்பாளர் நல்லவரான்னு பாக்குறது அவசியம் தான் ஆனா அதே நேரத்துல எந்த கட்சில இருக்காருங்குறதும் முக்கியம்.

ஏன் இந்த மாதிரி சொல்லுறோம்? நல்ல வேட்பாளரா இருந்தாலும் அவர் நினச்சத செய்ய சுதந்திரம் இருக்கணும். உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டா சென்னை அம்பத்தூர் தொகுதியில பாண்டியராஜன் நு ஒரு வேட்பாளர் நிக்குறாரு அதிமுக சார்பா. வேலை வாய்ப்பு தொடர்பான கலந்தாய்வு நிறுவனம் நடத்தகூடியவரு. இப்ப விருதுநகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் (முன்னாள்). எதுவும் தவறான செய்திகள் அவர பத்தி வந்த மாதிரி தெரியல. 

இப்ப அவர் நிக்குற தொகுதிக்கு தனியா தேர்தல் அறிக்கை தயார் செய்து வச்சிருக்கார். கட்சி தலைமை அனுமதிக்காக காத்திருக்கார். தேர்தல் பரப்புரைக்கு அவசியமானது தேர்தல் அறிக்கை. அது ஒரு முக்கிய ஆவணம். ஆனால் தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையிலும் அவரால வெளியிட முடியல. வேட்பாளரா இருக்கும் போதே இப்படினா சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் இதே போன்ற கையறு நிலை தான் இருக்கும். அதனால தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. அதிமுக ; திமுக ல மட்டும் இல்ல திரிவடுக கட்சிகள் சார்பா நிக்குற எல்லா வேட்பாளர்களுக்கும் இதே நிலை தான். எதையும் சுயமா செய்ய முடியாது.

இதுவே காங்கிரஸ் ; பா.ஜ.க. போன்ற கட்சிகல்னா கதையே வேற. இத செய்யாத அத செய்யாதன்னு யாரும் வந்து தடுக்க மாட்டாங்க ; யாரோட முன் அனுமதியும் வாங்க வேண்டியது இல்லை. ஒரு வேலை உங்கள் சட்ட மன்ற உறுப்பினர் நல்லவராக இருந்து, ஏதாவது நல்லது செய்தால், விளம்பரத்தில் தங்கள் படம் வர வேண்டும் என்று கோஷ்டி தலைவர்கள் நினைக்கலாம் ஆனால் தடுப்பது நடக்காது  ஏன் என்றால் இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தில் மாலுமி இல்லாத கப்பல் மாதிரி தான். 

தமிழர் கட்சிகள்னா இன்னும் சிறப்பு.

வேட்பாளர் படித்தவராகவும் ; 40 வயதுக்குள் இருந்தால் தேவலை. அதுக்கு மேல போனா, குனியுறது வலையுரதுக்கு பழக்கபட்டவரா இருப்பாரு. நிமிர முடியாது.
ஏழையா பணக்காரனாங்குறது முக்கியம் கிடையாது. வேலைல இருக்கணும் இல்ல சுயமா தொழில் செய்யணும். சமூக சேவை செய்யுறவங்க வேணாம். இந்த தேர்தல்லையோ தோத்தா அவங்களோட வேலைய செய்ய போனா தேவலை...

No comments:

Post a Comment