திருப்புமுணை மாநாடு :
"ஊழல் ராணி ஜெயாவின் ஆட்சியை ஒழிக்க தலைவர் அழைக்கிறார் தமுக்கம் மைதானம் நோக்கி அலைகடலென திரண்டு வாரீர்..." சுமார் இருபது வருடங்களுக்கு முன் வந்த அழைப்பு... அன்றெல்லாம் பஸ் முதலாளிகள் அல்லது லாரி உரிமையாளர்களிடம் பேசிவிட்டால் போதும் எல்லாரும் தானாவே ஏறிக்கொள்வார்கள்... யாருக்கும் தெரியாமல் வண்டியில் ஏறிக்கொண்டேன்... காரியாபட்டியில் தான், நான் இருப்பதையே கண்டுபிடித்தார்கள்.. பாதி வழியில் திருப்பி அனுப்பவும் முடியாது... காரியாபட்டியில் இருந்தே ஒலிபெருக்கிகள் காதை கிழிக்கும்...
"ஊழல் ராணி ஜெயாவின் ஆட்சியை ஒழிக்க தலைவர் அழைக்கிறார் தமுக்கம் மைதானம் நோக்கி அலைகடலென திரண்டு வாரீர்..." சுமார் இருபது வருடங்களுக்கு முன் வந்த அழைப்பு... அன்றெல்லாம் பஸ் முதலாளிகள் அல்லது லாரி உரிமையாளர்களிடம் பேசிவிட்டால் போதும் எல்லாரும் தானாவே ஏறிக்கொள்வார்கள்... யாருக்கும் தெரியாமல் வண்டியில் ஏறிக்கொண்டேன்... காரியாபட்டியில் தான், நான் இருப்பதையே கண்டுபிடித்தார்கள்.. பாதி வழியில் திருப்பி அனுப்பவும் முடியாது... காரியாபட்டியில் இருந்தே ஒலிபெருக்கிகள் காதை கிழிக்கும்...
"பாளையங்கோட்டை சிறையினிலே"... தெற்குவாசலில் நாகூர் ஹனிபா பாடிக்கொண்டிருப்பார்... தெப்பகுளமா... இடம் சரியாக நினைவு இல்லை ஆனால் தேருக்கு மிக அருகில் half போதையில் ஒரு அரசு போக்குவரத்து ஓட்டுனர் / நடத்துனர் செல்வி ஜெயலலிதாவை காது கொடுத்து கேட்கமுடியாத வார்த்தைகள் கொண்டு திட்டிகொண்டிருந்தார். ஊர்வலம் கிளம்பியது.. பாதிவழியில் பார்த்தால் யாதவா கல்லூரியில் / பேராசிரியராக இருந்து கட்சிக்கு வந்த திரு. தமிழ் குடிமகன் பாதையோர நடைமேடையில் மிக சாதாரணமாக அமர்ந்து இருந்தார். தமிழ் வருடப்பிறப்பு குறித்து தினமணியில் அவர் எழுதி இருந்த கட்டுரைக்கு நான் கடிதம் போட்டதற்கு எனக்கு பதில் மொழி அனுப்பியவர். selfie எல்லாம் எடுக்கவில்லை.
"இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?"... ஊர்வலம் பல சாலைகள் வழியாக சென்றது. இரு மருங்கிலும் உள்ள பல வீட்டு மாடிகளில் இருந்து அக்காக்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தார்கள். கீழே இருந்து அவர்களை நோக்கி கை அசைப்பதும் ஆபாசமாக பேசுவதும்... போதை சற்று அதிகமானால் கனிமொழி குறித்தும் அதே தான்...
இறுதியாக, ஊர்வலம் கோரிப்பாளையம் பாலத்தில் இருந்து இறங்கி செல்லும் தேவர் சிலை அருகில் உள்ள மேடையில் இருந்து கலைஞர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்... "திமுக ஊர்வலம் மதுரையே ஸ்தம்பித்தது"..மறுநாள் தலைப்பு செய்தி...
அடுத்தநாள் மாநாடு.. பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பில் இருப்பவர்களிடம் அழைப்பிதல் இருக்கும். எல்லாரும் நுழைவுக்கட்டணம் செலுத்தி தான் உள்ளே போக வேண்டும். தென்னரசு நுழைவு வாயில், அழகிரி நுழைவாயில் எல்லாம் இருக்கும் ; காலையிலில் இருந்து பல தலைப்புகளில் பலரும் பேசுவார்கள்.. மாலையில் தான் கலைஞரும் மற்றும் பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பேசுவார்கள்.. சென்னை ; சேலம் ; வேலூர் என்று பல மாவட்டங்களில் இருந்து பலரும் கூட்டமாக சேர்ந்து வந்திருப்பார்கள்... ராத்திரி கொடைக்கானலுக்கு போகணும் சரியா தூங்க முடியாது... அதனால் பெரும்பாலானோர் மாநாட்டு பந்தலில் தூங்குவார்கள்...
"வெற்றி கொண்டான் எப்ப பேசுவாரு... தீப்பொறி ஆறுமுகம் எப்ப பேசுவாரு" எவ்வளவு தூக்கத்துல இருந்தாலும் அவ்வபோது எழுந்து கேட்ப்பாங்க... "உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சு போவேன்யா" என்ற பீடிகையோடு தீப்பொறி ஆறுமுகம் சொல்லும் விளக்கங்களுக்கு விசில் சத்தம் எட்டு ஊருக்கு கேட்க்கும்.
உள்ளே இயக்க புத்தக கடைகள் இருக்கும்... அறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை சிறுகதைய பள்ளிக்கூட புத்தகத்துல படிச்சிருக்கமே.. அவர் மற்றும் இயக்க எழுத்தாளர்கள் எழுதுன புத்தகங்கள படிக்கலாம்னு நிறைய வாங்கினேன்...வீட்டுக்கு போய் படிச்சு பாத்தா... எல்லாம் தினத்தந்தி matter... பள்ளிக்கூடத்துல கடைசி bench ளையும் புதர்லையும் படிச்சு மாட்டிப்பாங்களே... அந்த புத்தகம் எவ்வளவோ தேவலை...
நடிகர்கள் தியாகு ; சந்திரசேகர் ; பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலு போன்றோர் பேசுவார்கள்... யார் வேண்டுமானாலும் இயக்கத்தை விட்டு போகலாம். ஆனால் தலைவரை விட்டு நாங்கள் எப்பொழுதும் போகமாட்டோம்னு பேசுவாங்க... வைகோ & ஜெயலலிதா வ தாக்கி பலரும் பேசுவாங்க..
மாலையில் பொது உடமை தோழர்கள் ; மருத்துவர் ராமதாசு (அப்ப அவரு டாக்டர்); மூப்பனார் எல்லாரும் பேசுவாங்க.. ஆட்சிய அமைச்சுட்டமாதிரியே எல்லாரும் பேசுவாங்க.... "நம்ம கூட்டணி தான் வெற்றி பெருவோம்னு எல்லாரும் ஓய்வு எடுக்க கூடாது. ஊழல் அரசி ஜெயாவ வீழ்த்த எல்லாரும் கடுமையா போராடணும்"னு ராமதாஸ் பேசுவாரு... கடைசியா.. கலைஞர் பேசுவாரு விசில் காத கிழிக்கும்... பேச ஆரம்பிச்ச இரண்டு நிமிசத்துல தூங்கிட்டேன். மாநாட்டுக்கு வர்ற பலருக்கும் இது ஒரு கேளிக்கை அவ்வளவு தான்.. கொள்கை விளக்கம் போன்ற தக்காளிகள் எல்லாம் செல்லுபடி ஆகாது.
இப்ப எல்லா கட்சிகளும் இப்ப திருப்பு முனை மாநாடு நடத்துறாங்க... வண்டி திரும்புற இடத்துல மாநாட்ட வச்சுட்டு, திருப்புமுணை மாநாடுன்னு சொல்லுறாங்க... நாளைக்கு கூட சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து சென்னைல ஒரே மேடைல பேச போறாங்களாம்... அரசியல் திருப்பு முணை மாநாடாம்... எங்க நடக்குது... தீவு திடல்ல... கடல பாக்கவந்தவன எல்லாம் மாநாட்டுக்கு வந்த மாதிரி காட்டலாம்...
முன்னமாதிரி விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் இப்ப இல்ல... தமிழனா வேடம்போட்டுகிட்டு திரிவடுக குஞ்சுகள் வரலாம்... பிரியாணிக்கும் குவாட்டருக்கும் சிலர் வரலாம்... பிகார் ல இருந்து வந்திருக்கவங்கள கூட உட்கார வச்சு கூட்டம் கூடினதா காட்டலாம்... பழைய திரைக்கதை வசனம் எல்லாம் இப்ப ஓடாது...
No comments:
Post a Comment