காஷ்மீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ ஒளிபரப்பானபோது ; தில்லி மிருக காட்ச்சி சாலையில் நடந்த சம்பவத்தை வீடியோவில் பார்த்தபோது, பலரும் சொன்ன கருத்து, "வீடியோ எடுத்த நேரத்துல போய் காப்பாத்தலாம்ல?"
நட்பு வட்டத்தில் பலரும் பத்திரிக்கை / ஊடக துறையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கான் பணி என்ன என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தபோதிலும் சில நேரங்களில் சறுக்கல்கள் நிகழ்வதால் நினைவூட்ட இந்த பதிவு. மூன்று நிகழ்வுகளின் வாயிலாக...
நிகழ்வு ஒன்று : சில மாதங்களுக்கு முன்னாள், எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியை திரு. ராம் தம்பதியினர் நடத்தினார்கள் . அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சொன்ன திரு. வைரமுத்து, வர இயலாத காரணத்தால் காணொளி காட்சி மூலம் பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் திரு ஜெயகாந்தன் மிக சுருக்கமாக பேசினார். "நிகழ்ச்சிக்கு வர இயலாவிட்டாலும், நம்மைப்பற்றி நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் ; இங்கே வந்திருப்பவர்கள் அனைவருக்கும், நன்றி வணக்கம்."
இந்த நிகழ்ச்சியை பதிவு செய்யும்போது, அவரவர் கொள்கையை புகுத்தி பலவாறாக பதிவு செய்யலாம்.
கடவுளுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் ஆனால் அந்த பேரினை ஒரு சிலர் தான் பெறுகிறார்கள் ; சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபட முடிகிறது ; சிலருக்கு அங்கே செல்லமுடியவில்லை ஆனாலும் நினைவு மட்டும் அங்கேயே இருக்கிறது. ஆனால் கடவுளை பொருத்தமட்டில் வேறுபாடு பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரி தான் அருள் புரிகிறார். அதுபோல திரு. ஜெயகாந்தன் அவர்கள், தன் வாசகர்கள் அனைவரையும் ஒரே மாதிரி தான் பார்கிறார்.
இதையே பாரதிதாசன் பாணியில் சொல்வதென்றால், தான் பெற்ற குழந்தைகளில் ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு பணிவிடை செய்தாலும் தாயானவள் அனைவரையும் ஒரே மாதிரியாக தான் பார்ப்பாள். அதுபோல எழுத்தாளர் பேதம் பார்க்காமல் நடந்துகொண்டார்.
நிகழ்வு இரண்டு : இந்து மதத்தின் சிறப்பு குறித்தும் மத நல்லிணக்கம் குறித்தும் சிகாகோ நகரத்தில் நடந்த அனைத்து மத மாநாட்டில் புரட்சி துறவி விவேகானந்தர் சிறப்பாக உரையாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தன் உரையை எப்படி துவக்கினார் என்று கேட்டால் நாம் அனைவரும் என்ன சொல்லுவோம்?
அனைவரும் "Ladies and Gentlemen" என்று பேசியபோது அவர்மட்டும் "Brothers and sisters of Amercia" என்று பேசினார் என்று சொல்லுவோம். காலம் காலமாக இப்படியே சொல்லிவந்தார்கள். அண்மையில் நடந்த விழாவின் மூலன் நான் அறிந்துகொண்டது என்னவென்றால், அவர் "Sisters and brothers of Amercia" என்று தன் உரையை துவக்கி உள்ளார்.
"இரெண்டும் ஒன்று தானே. என்ன வேறுபாடு?" என்று கேட்கிறீர்களா...
இந்த தேசத்தை சேர்ந்தவர்கள், பெண்களை அடிமை போல நடத்துகிறார்கள் என்று தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளது. விதவைகள் மறுமணத்தை விவேகானந்தர் எதிர்த்தார் என்று கட்டுரை எழுதுகிறார்கள்.
நிகழ்வு மூன்று : முல்லை பெரியாறு குறித்த செய்தியை பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் "புதிய தலைமுறை" இதழ் பிழை செய்கிறது.
அந்த அணையை கட்டுவதற்கு திட்டம் தீட்டியவர் யார் என்பதை நன்றாக தெரிந்திருந்தபோதிலும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்துவருகிறார்கள்.
திரு. ஜான் பென்னிகுவிக் செய்த அளப்பெரிய சாதனையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ஏதோ பஞ்சம் வந்து பலரும் செத்ததற்கு பின் தான் ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டியது போல பதிவு செய்கிறார்கள். ஆனால் பஞ்சம் வருவதற்கு முன்னமே ஒரு தமிழனால் திட்டம் தீட்டப்பட்டது.
நிறைவாக, செய்தியை படிக்கும் ; நிகழ்ச்சியை பார்க்கும் நம் கடமை என்ன? தொலைகாட்சி பெட்டியின் முன்னாள் உட்கார்ந்து கொண்டு, அதை அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லுவது எளிது. மெய்ப்பொருள் காண்பது அறிவு ; பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும் நாம்.

ஒரு இடத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அல்லது பிழையாக பதிவு செய்யப்படும் செய்தி தொடர்ந்து நகல் எடுக்கபடுகிறது. கடந்த செய்வாய் அன்று பெங்களுரு தீர்ப்பை பதிவு செய்தது போல. உண்மை உடனடியாகவோ அல்லது சற்று காலம் தாழ்ந்தோ வெளியில் வந்துவிடும்.
நடந்ததை, நடந்தவிதமாக ; ஒருவர் சொன்னதை, சொன்ன விதமாக பதிவு செய்வது நல்லது. நம் கருத்துக்களை புகுத்தி, செய்தியை செய்தியாக அல்லாமல் திரைக்கதை வசனமாக எழுதுவதென்பது பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் மட்டும் அல்ல, நம் செய்தியை படிப்பவர்களை ; நாம் நடத்தும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை அவர்களின் அறிவை ஏளனம் செய்வதாக அமையும்.
நிறைவாக, செய்தியை படிக்கும் ; நிகழ்ச்சியை பார்க்கும் நம் கடமை என்ன? தொலைகாட்சி பெட்டியின் முன்னாள் உட்கார்ந்து கொண்டு, அதை அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லுவது எளிது. மெய்ப்பொருள் காண்பது அறிவு ; பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும் நாம்.
No comments:
Post a Comment