பாதுகாப்பு

சில வாரங்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில், எங்கள் துறையில் உடன் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு பொறுப்பாளன் என்ற முறையில் பாதுகாப்பு குறித்த காட்சியளிப்பை கொடுத்தேன். 

காட்சியளிப்பின் உள்ளடக்கம் என்னவென்றால், அலுவலகத்தில்  பாதுகாப்பு ; பணிச் சூழலியல் ; எடை தூக்கும்  போது கவனத்தில்  எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு  நடவடிக்கைகள் ; சாலை பாதுகாப்பு.  ஏதோ  சில காரணங்களால் அன்று  காட்சியளிப்பை நான் சரிவர செய்யவில்லை என்பதனை உணர்ந்தேன்.

அதற்க்கு அடுத்த வாரத்தில் அலுவலகம் முடிந்து செல்லும் போது சாலையை கடந்து செல்லும் நேரத்தில் யாரோ  என்னை அழைப்பது போல இருந்தது. சாலையை கடக்கும் போது கவன சிதறல் வேண்டாம் என்று காது கேளாதது போல சென்று விட்டேன். சாலையை கடந்ததும், அலுவலக நண்பர் தன்  கையை என் மீது வைத்து சார் என்று அழைத்தார். திரும்பி பார்த்தேன்.  "என்ன சார் safety presentation லாம் கொடுக்குறீங்க ஆனா சாலைய  பாதுகாப்பா கடக்குறது எப்படீன்னு தெரியலையே உங்களுக்கு."

சில அடி தூரத்திலேயே வரிக்கொடு இருந்தும் ; சில மாதங்களாக சாலைக்கு நடுவில் பாதுகாப்பற்ற முறையில் கடந்துகொண்டிருந்தேன். சோம்பேறித்தனம் தான் காரணம். என் தவறை அலுவலக நண்பர்  சுட்டிக்காட்டிய போது ஒரு மாதிரி இருந்தது. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இருந்தால் இப்படித்தான்.

சாலையில் எவ்வளவோ பேர் அப்படி போகிறார்கள். ஏன் அவர்களிடம்  எல்லாம்  சொல்லாமல்  என்னிடம்  மட்டும்  சொன்னார்  என்று  யோசித்து  பார்த்தேன். என் மீது உள்ள அக்கரையில் தான் சொல்லி இருக்கிறார் என்பதனை புரிந்துகொண்டேன்.

கடந்த ஒரு வாரமாக சாலைகளில் நடப்போர் கடக்கும்  இடத்தில் மட்டுமே கடக்கிறேன்.


No comments:

Post a Comment