தீப ஒளி திருநாள் கொள்வனவு

சென்னை உஸ்மான் சாலையில் உள்ள துணி / நகை கடைகளைபொருத்தமட்டில்  தீப ஒளி திருநாளுக்கான கொள்வனவு எப்பொழுதுமே அதிகமாக இருக்கும். அதனால் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும். ஆனால் காலம் காலமாக அங்கே செல்பவர்களுக்கு தெரியும் இந்த வருடம் கூட்டம் குறைவு என்று.

பெரும்பாலனா நிறுவனங்கள் சென்னையிலேயே பல கிளைகளை துவக்கிவிட்டதால் இங்கே கூட்டம் சற்று குறைவு தான். இருந்தபோதும் வருடா வருடம் ஒரு கண் துடிப்பு நாடகம் நடக்கிறது.

தீப ஒளி திருநாளுக்கு சில மாதங்களுக்கு முன்னாள் நீதிமன்றத்தில் வழக்கு வரும். "அங்கே இருக்கும் கட்டிடங்கள் எதுவும் பாதுகாப்பானவை கிடையாது, சட்டம் சொல்லக்கூடிய பாதுகாப்பு முன்னெடுப்புகளை செய்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். இல்லை என்றால் பாதுகாப்பு விதிமீறல் உள்ள கட்டிடங்கள் அனைத்தும்  மூடப்படும்." இப்படி ஒரு அறிவிப்பு வரும்.




சரி நீதிமன்றங்கள் மிகவும் கடுமையாக நடந்துகொள்கின்றன, இந்த வருடமாவது வணிக நிறுவனங்கள் தங்கள் தவறை திருத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம். ஆனால் சொல்லிவைத்தது போல ஒரு இடைக்கால தீர்ப்பு வரும். "தீப ஒளி திருநாளுக்கான கொள்வனவு அதிகமாக இருக்கும். இப்பொழுது கடைகளை மூடினால் மக்கள் பாதிக்கபடுவார்கள். தவிரவும் குறைவான கட்டிடங்களில் மக்கள் முண்டியடித்து சென்றால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும். அதனால் தீப ஒளி திருநாள்  வணிகம் முடிவடைந்த பின் இது குறித்து நாம் முடிவு செய்வோம்."

என்றைக்குமே நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு. தீப ஒளி திருநாள் / பொங்கல் / ரம்ஜான் / கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ; ஆடி தள்ளுபடி காலங்களில், காலையில் கூட்டம் குறைவாக உள்ள நேரத்திலோ அல்லது இரவு கடை அடைக்கபோகும் நேரத்திலோ சென்று கொள்வனவு செய்வது சற்று பாதுகாப்பானது.

No comments:

Post a Comment