தமிழுக்கான சந்தை (6)

(இதை படிக்க ஆகும் நேரம் : 3 நிமிடங்கள்.)

அறத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் உழவுக்கும் ; இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மற்ற தொழில்களுக்கும் உள்ள வேறுபாடு அனைவரும் அறிந்ததே.

தொழில் புரட்சிக்கு பிந்தையகாலத்தில், எவ்வளவு உற்பத்தி செய்கிறோம் ; எவ்வளவு இலாபம் ஈட்டுகிறோம் என்பதில் மட்டுமே கவனம் இருந்தது.
விற்பனை மற்றும் இலாபத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பிடிபடவில்லை.

ஒரு நுகர்வோரை ஈர்ப்பதைவிட வாடிக்கையாளராக மாற்றி தக்கவைப்பது 
பெரும் சவாலாக இருந்தது. இதனை எதிர்கொண்டு, வெற்றியை நீண்ட காலத்துக்கு தக்கவைத்திட, நுகர்வோரின் மனநிலையை அறிந்துகொள்வது அவசியம் என்று உணரப்பட்டது.

இந்த அடிப்படையில்தான் வாடிக்கையாளர் சேவை மையம் & அதிகாரி ; கட்டணமில்லா அழைப்பு எண் (customer service Center & executive ; Toll free number) கோட்பாடு உருவாகி இன்றைக்கு பலரும் இந்த துறையில் பணி செய்கிறார்கள்.

ஒரு நுகர்வோரின் மனதை அறிய, அவருடைய மொழியில் பேச வேண்டும் என்ற அறிவு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. ஏனென்றால் அவர்களுடைய மொழியை உயிராக கருதுபவர்கள் அவர்கள். தன் மொழியை நேசிக்கும் ஒருவன் அடுத்த மொழியையும் மதிப்பான். ஆனால் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்படி இல்லை.

#சிக்கல் : சரி விடயத்துக்கு வருவோம். அன்றாடம், நம் அலைபேசிக்கு பல விற்பனை அழைப்புகள் வருகின்றன. அவை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது Hindi யில் இருக்கும்.

அப்படி அழைப்புவரும் போது, "தமிழில் மட்டுமே நான் பேசிடுவேன். தமிழ் பேசத் தெரிந்த ஒரு அதிகாரியை என்னிடம் பேசச்சொல்லுங்கள்", என்று ஆங்கிலத்தில் சொல்லிடுவேன். Hindi என்பது நம் தேச மொழி, அது உங்களுக்கு தெரியாதா என்று ஒரு சிலர் கேட்பார்கள்.

அவர்களுக்கு, Hindi தேசிய மொழி கிடையாது என்றோ அல்லது நம் மொழியின் சிறப்பு குறித்தோ பேசுவதில் எந்த பயனும் இல்லை.

ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறீர்களே ஆங்கிலத்திலேயே தொடரலாமா என்று சிலர் கேட்பார்கள்.

என் ஊரில், என் பணத்தை கொடுத்து உன் பொருளை / சேவையை வாங்கும் நுகர்வோர் நான். என் மொழியில் பேசினால் உன்னிடம் வாங்குவேன். இல்லை என்றால் வேறு யாரிடமாவது வாங்கிக்கொள்வேன். என்று சொல்லிடுவேன்.

#பண மொழி, கண்டிப்பாக, எல்லோருக்கும் புரியும்.

சிறிது நேரத்திலோ அல்லது அடுத்த நாளோ மீண்டும் அழைப்பு வரும். நிம்மல்க்கு என்ன வேண்டும் சார் என்று ஒருவர் அரைகுறை தமிழில் பேசுவார். பரவாயில்லை சேட்டு பெண்ணோ Bihari பையனோ, என்னிடம் தமிழில் பேச வேண்டும்.

இதனை 2007 ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறேன்.

தமிழில் பேசிய ஒரே காரணத்துக்காக ஒரு வங்கியில் கடன் அட்டை வாங்கினேன். கடன் அட்டையை எப்படி பயன் படுத்துவது என்று எனக்கு தெரியும்.

தள்ளுபடி விலையில் பொருள் தருகிறான் என்று #Amazon ல், தேவையே இல்லாத பொருளை வாங்கும் நாம், தமிழ் இல்லாதது ஒரு சேவைக்குறைபாடு என்பதை உணரவேண்டும்.

நீங்களும் இது போல செய்து வருவீர்கள். சிந்தையில் வைத்திருப்பவர்கள் 
சரி என்று பட்டால் நடைமுறைப் படுத்திடுங்கள்.

Facebook : 8 ஏப்ரல், 2017

No comments:

Post a Comment