தமிழுக்கான சந்தை (5)

சில வருடங்களுக்கு முன் ஆண்டு விடுமுறைக்காக கேரளா சென்ற போது, "HDFC ATM வந்தால் நிருத்துங்கள் சேட்டா" என்று மகிழுந்து ஓட்டுனரிடம் சொன்னேன்.

நான் குறிப்பிட்ட வங்கிகளின் ATM வந்தாலும் நிறுத்தாமல், ஏதோ சொல்லி வைத்தார் போல, South Indian Bank ATM ல் மட்டுமே நிறுத்தினார். மலயாளிகள் வங்கி, அதனால் அங்கே மட்டும் நிருத்தியிருப்பார் என்று ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை. அவருடைய உறவினர் யாராவது அந்த வங்கியில் வேலை செய்யக்கூடும்.

முன்பெல்லாம் வங்கிக்குச் சென்று படிவங்களில் எழுதிக் கொடுத்து பணத்தை எடுப்போம். ஆனால் இன்று பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை தான் பயன்படுத்துகிறோம்.

அதில் தமிழை நாம் பயன்படுத்த வேண்டும். பணத்துக்கு மொழி வேருபாடு கிடையாது என்று அவசரகதியில் எடுத்துச் செல்வது சரியில்லை.

குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் (அதிலும் குறிப்பிட்ட ஊரில் ஒரு பகுதியில் மட்டும்) பரிவர்த்தணை ரசீது தமிழில் வருகிறது.

தமிழ் மொழி தெரிவு என்பதே பல வங்கிகளின் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் இல்லை. அல்லது பெரும்பாலும் அந்த தெரிவு மட்டும் வேலை செய்யாது.

உதாரணத்துக்கு சில.. தலைநகர் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் Rangarajapuram ATM ல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி தெரிவு நன்றாக வேலை செய்யும். தமிழ் மொழி தெரிவு பெரும்பாலான நேரங்களில் வேலை செய்யாது. சென்னையின் சில்லரை வர்த்தக மையமாக இருக்கும் T.நகரில் போத்தீசுக்கு குறுக்கெதிரே இருக்கும் Dhanalakshmi வங்கி ATM ல் மலையாளம் மட்டும் தான் தமிழ் கிடையாது. பொள்ளாச்சியில் கோவை சாலையில் உள்ள HDFC ATM. நாகர்கோவிலுக்கு நடக்கும் தூரத்தில் இருக்கும் இந்தியன் வங்கி ATM....

#தீர்வு : அது போன்ற நேரங்களில், அந்த வங்கிக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்புவது ; சரியான பதில் வரும் வரை, அந்த வங்கி ATM ஐ பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன்.

உங்களில் பலரும் இவ்வாறாக செய்து வருகிறிர்கள் என்று நம்புகிறேன்.
இதுகாரும், இதனை சிந்தையில் வைத்திருப்பவர்கள், சரி என்று பட்டால் இதனை செயல்படுத்திட வேண்டுகிறேன்.

இந்த வகையில் சில வங்கிகள் (AXIS வங்கி ; Citi bank) பரவாயில்லை. ஒரு புகாரளித்தால் மன்னிப்பு கோருவது ; சீர் செய்த பின், நிகழ் நிலை தகவல் தருவது என்று அசத்துவார்கள்.

Facebook 3 ஏப்ரல் 2017

No comments:

Post a Comment