தமிழுக்கான சந்தை (4)

எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு குடியிருப்போர் நலச் சங்கம் (welfare association) துவக்கினார்கள். சங்கத்தின் பெயரில் துவங்கி, அறிவிப்புகள் ; சட்ட திட்டங்கள் என்று அனைத்துமே ஆங்கிலத்தில் இருந்தது. ஒரு சில அறிவிப்புகள் தமிழில் இருந்தது.

ஏன் தமிழை புறக்கனிக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் சொன்ன காரணங்கள்,

1) நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் இல்லை. எங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்திட தெரியாது.
2) தமிழில் எழுதினால் அதிக நேரம் எடுக்கும். பிழையாக எழுத வேண்டாமே என்று எழுதவில்லை.
3) தமிழ் எழுத படிக்கத் தெரியாத மற்ற மாநிலத்தவர்களும் உள்ளார்கள்.
4) தமிழில் ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றங்களில் எடுபடாது.

அப்போது தான் நான் செய்த மிகப் பெரிய பிழையின் தாக்கத்தை உணர்ந்தேன்.
பெருநகரங்களில் நிலம் அல்லது வீட்டுக்கான பத்திரப்பதிவு செய்திடும் போது அந்த ஆவணங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன.

பெரு நிருவணங்கள் மூலமாக வாங்கும் போது நாம் முன் பணம் கொடுத்ததும் அதற்கு அத்தாட்சி ரசீது தரும் போதே, தமிழில் வேண்டும் என்று கேட்க துவங்கி ; கட்டிடத்தின் உள் வடிவமைப்பில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்த மின் அஞ்சல் ; பத்திரப்பதிவு ; வருடாந்திர பராமரிப்பு ; புது அடுமனை / நிலம் குறித்த சலுகை கடிதங்கள் என்று அனைத்திலும் தமிழ் இருக்குமாரு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, சில மாதங்களாக, எங்கள் குடியிருப்போர் நலச் சங்கததின் சட்ட திட்டங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வருகிறேன்.புதிதாக சொத்து வாங்கிய சகோதரர் தமிழ்ச்செல்வன் பதிவைப் பார்த்த போது, நானே சொத்து வாங்கியது போன்று மகிழ்ச்சியாக இருந்தது. கலப்படமில்லாத தமிழில் ஆவணங்களை வடிவமைத்திருக்கும் சகோதரருக்கு வாழ்த்துகள். நாம் அனைவரும் இப்படி செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் சொத்து ஆவணம் தமிழில் இல்லையென்றால் அண்டார்டிக்காவிலா தமிழை வைக்க முடியும்.

Facebook : 25 மார்ச் 2017

No comments:

Post a Comment