தமிழுக்கான சந்தை (3)

நேற்று ஆதார் எண் பெறுவதற்காக அதிகாரபூர்வமான இணையதளத்தை பார்த்தேன்.

விருப்ப மொழித் தேர்வாக 12 மொழிகள் இருந்தன. தமிழை தேர்ந்தெடுத்தேன். முதல் பக்கத்தில் 40 விழுக்காடு தமிழில் இருந்தது. மற்றவை அனைத்தும் ஆங்கிலம் / இந்தியில் இருந்தது.

பதிவிறக்க படிவங்கள் பகுதியில் விண்ணப்ப படிவம் தமிழில் இல்லை.

முதல் பக்கத்தில் இருந்து அடுத்த பகுதிகளுக்குச் செல்லும் எந்த சுட்டியை அழுத்தத்தினாலும் அவை (அடுத்தடுத்த பக்கங்கள்) ஆங்கிலத்தில் உள்ளது.
உதாரணத்துக்கு : "பதிவு மையம் கண்டறிதல்" என்ற சுட்டியை அழுத்திப் பாருங்கள்.

"குறைதீர்வுகள்" என்ற சுட்டியை அழுத்தினால் அடுத்த பக்கம் தமிழில் உள்ளது. ஆனால் வாசிப்பதற்கு ஏதுவாக இல்லை. அடுத்தடுத்த சொற்களுக்கு இடையே இடைவெளி இல்லை.

நிறைவாக "உதவிக்கு 1947", என்ற எண்ணுக்கு அழைத்தால் press 1 for English என்று தொடங்கி ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஆங்கிலத்தில் பேச எண் 5 ஐ அழுத்துங்கள் என்று சொல்லுகிறது.
"press 1 for English & 5 for ஆங்கிலம் என்பது என்ன?"

எண் 5 ஐ தேர்ந்தெடுத்து பேசினேன். அந்த நபர் இந்தி / ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும் என்று சொன்னார். தமிழ் பேசுபவர்கள் இல்லையா என்று கேட்டேன். இல்லை என்றார்.

தமிழை ஏண் இப்படி புறக்கணிக்கிறார்கள்? அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பியுள்ளேன்.

இதுகாறும் ஆதார் எடுத்தவர்கள் பலரும் இதனை கவனித்து புகார் அனுப்பி இருப்பீர்கள். உங்கள் புகாருக்கு சரியான மறுமொழி வந்ததா?

Facebook : 18 மார்ச், 2017

No comments:

Post a Comment