தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 56

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 56

வாழ்க வளமுடன்!

இந்த தொடருக்கு மாற்று கருத்து மூலமும் ; விருப்பங்கள் / பகிர்வுகள் வாழ்த்துகள் மூலமாகவும் ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி. யார் விருப்பம் தெரிவிக்கிறார்கள் யாரு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பார்த்து எந்த இடத்திலும் இந்த தொடரின் போக்கையோ அல்லது கருத்தாக்கத்தையோ மாற்றிக்கொள்ள வில்லை. பிறந்தநாள் பார்த்து வாழ்த்து சொல்லுவது / உங்கள் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து என் பதிவுக்கு ஆதரவு பெறுவது என்று எந்த வேளையிலும் நான் ஈடுபடவில்லை.  

இந்த தொடரை நிறைவு செய்யும் தருவாயில் ஒரு விடயத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். திராவிட கட்சிகளுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு வீணடிக்காதீர்கள்.  அந்த பாதக செயலை செய்தால் அதனால் ஏற்ப்படும் 
சீரழிவானது பல தலைமுறைக்கும் இருக்கும்.  எதனால் இதனைச்  சொல்லுகிறேன்? 
தமிழர் நலன் ; தெலுங்கர் நலன் ; குடும்பத்தார் நலன் என்று இல்லை யாருடைய நலன் குறித்தும் அவர்களால் சிந்திக்க முடியாத சுயநலம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. முதலில் காமராசரை  நாங்கள் தான் முதல்வர் ஆகினோம் என்று சொல்லுவார்கள் ; தமிழர்கள் ஒன்று கூடினால் காமராசர் எல்லாம் ஒரு ஆளா என்று கேட்ப்பார்கள்.

"E.V.ராமசாமி யை மட்டும் விமர்சனம் செய்கிறீர்களே ஏன் காமராசர் குறித்தும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்தும் விமர்சனங்கள் வைப்பதில்லை" என்று தமிழ் தேசியம் பேசுபவர்களை பார்த்து கேட்கிறார்கள் திரிவடுகர்கள்.

அப்படி பேசினால் அவர்கள் பிறந்த சாதி ஓட்டுக்களை இழக்க நேரிடும் அவர்களை விமர்சனம் செய்தால் வாயிலேயே குத்துவார்கள். இப்படி அவர்களாகவே காரணம் சொல்லுகிறார்கள் திரிவடுகர்கள்.

காரணம் வேறு ஒன்றும் இல்லை. வோட்டு அரசியலுக்காக ஒருவரை புகழ்வது. பின்னர் அதே தலைவரை பார்த்து இகழ்வது என்ற மனநிலை உடைய திரிவடுகர்களுக்கு யார் என்ன செய்தாலும் நம்மைப் போலவே மற்றவர்களும் நாடகமாடுகிரார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

முகவை மாவட்டம் தந்த முத்துக்கள் எம் தலைவர்கள். திரிவடுக சேர்க்கையால் தான்  திரு. காமராசர் பல தவறான முடிவுகள் எடுத்தார். இல்லை என்றால் விடுதலை போரிலே சொக்கத் தங்கமாகவே இருந்தார். திரிவடுகரகளின் சகவாசம் இருந்த போதும் கடைசிவரை தனக்கென சொத்து சேர்க்காததே பெரிய சாதனை தான். 

திராவிட இயக்கங்களால் மக்களை துண்டாட மட்டுமே  முடியும். இனியும் கலகமூட்டுபவர்களின் வலையில் விழ மாட்டோம் என்று சூளுரைப்போம்.

வளர்க வையகம்!

No comments:

Post a Comment