NGO / TRUST

"வெயில், இந்தியால நான் DONATE செய்யணும் ; எந்த NGO / TRUST நல்லா செய்யுறாங்கனு பாத்து சொல்லுங்க. பணத்த ONLINE ல TRANSFER செஞ்சுடுறேன்."
வெளிநாட்டில் வாழும் / பணிபுரியும் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் பலரும் இந்த கேள்வியை தொடர்ந்து கேட்டுவருகிறார்கள்...

நல்ல எண்ணத்தோடு கேட்பவர்களை நாம் ஊக்கப்படுத்தாவிட்டாலும் பரவா இல்லை ஆனால் அவர்களின்  எண்ணத்தை சிதைத்து விடக்கூடாது என்று கருதியே பல நேரங்களில் மௌனமாக இருந்து உள்ளேன். ஆனால் ஒரு சிலரிடம் வெளிப்படையாகவே பேசி இருக்கிறேன். இங்கு இருக்கும் நிலவரம் அப்படி.. பொதுவாகவே இந்த திரிவடுக  அரசியல் சூழலில்...

இங்கே நம்மூரில், நன்கொடை என்பது ஒரு கை கொடுப்பது மறு  கைக்கு தெரியக்கூடாது என்ற புரிதலில் இருந்து வந்துள்ளார்கள். (ஆன்மீக ரீதியாகவோ அல்லது சமுதாய அமைப்புமுறை சார்ந்தோ பண்ணெடுக்காலமாக இது தொடர்ந்து வந்துள்ளது). முதலில் தன் குடும்பம் ; அடுத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் தன் குடும்பத்துக்காக பணிபுரிபவர்களின் குடும்பம் இவ்வாறாக அது விரிந்து செல்லும்... குடும்பம் எனும்போது அது கூட்டு குடும்பத்தையே குறிக்கும். ஆனால் மேற்கு உலகில் அப்படி இல்லை.

உலகெங்கிலும் இந்த NGO / TRUST மூலம் நடக்கும் நல்லவை நம் கண்களுக்கு எளிதில் புலப்படும். ஆனால் அத்தோடு நின்று விடாது. இறுதியில், ஒரு மதத்தை வளர்க்கவோ அல்லது கட்சியை வளர்க்கவோ அல்லது வணீகத்தை வளர்க்கவோ பயன்படுத்தப்படும்.  ஒரு தலைமுறை செய்த நண்கொடை விதைகளின் அறுவடையை அடுத்த தலைமுறை பயன்படுத்திக்கொள்ளும். ஆக இந்த donations - non profit கிடையாது.

நீடித்து நிலைக்கும் அமைப்புமுறை கொண்ட தமிழ் சமூகத்தின் பலன்களை திரிவடுக அரசியல் பயன்படுத்திக் கொண்டதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.

நான் பார்த்தவரை இங்கே சில நல்ல அறக்கட்டளைகள் உள்ளன ; ஆனால் அவற்றின் பதிவு புதிப்பிக்கப்படுவது இல்லை. ஒரு ஆசிரியப்பள்ளி நடத்துவதற்கு தேவையான எல்லா கட்டமைப்பும் இருக்கும் ஒரு  அறக்கட்டளைக்கு 10 வருடமாக அனுமதி கிடைக்கவில்லை. அந்த கட்டமைப்பு பயன்படுத்தப்படாமல் சிதைவதை பார்க்க முடிகிறது. யாராவது தன்னிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித்தர கேட்கிறார் என்றால் மாற்றித்தர வேண்டும் இல்லை என்றால் பதிவு ரத்தாகிவிடும்.

ஒரு NGO / TRUST க்கு donation கொடுத்தால் தொடர்ந்து மேலும் பல NGO / TRUST களிடம் இருந்து அழைப்பு வரும். வரிச்சலுகை குறித்து விவரித்து கூறுவார்கள்.

நிறுவனங்களின் நீடித்த நிலையான வளர்ச்சி தணிக்கையாளனாக நான் பார்த்தவரை பல பெரு நிறுவனங்கள் CSR என்று சொல்லப்படும் corporate social responsibility மூலமாக பல கோடிகளை செலவிடுகிறார்கள் என்று சொல்லுவதை விட முதலீடு செய்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதனால் தான் அவர்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், IMPACT ASSESSMENT என்று சொல்லப்படும் தாக்க மதிப்பீடு செய்யச்சொல்கிறோம்.

ஆகவே பலரிடம் முன்னமே சொன்னதையே திரும்பச் சொல்லுகிறேன். நாம் கொடுக்கும் பணம் மூலம் நமக்கு மன நிம்மதி கிடைக்கலாம். நம் நண்பர்களிடம் பெருமையாக சொல்ல முடியும் நானும் நாலு பேருக்கு உதவி செய்திருக்கிறேன். ஆனால் யாரைக்காட்டி அந்த பணத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு வேண்டியது என்ன என்று தெரிந்து கொண்டு செயல் படுங்கள். தாய்நாட்டுக்கு நீங்கள் வரும் போது முன்னறிவிப்பு இன்றி அங்கே செல்லுங்கள் ஒரு நாள் அவர்களோடு செலவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு கணக்கு கேளுங்கள். சரியான நபருக்கு அது போய் சேர்ந்ததா என்று பாருங்கள். அடிக்கடி தனியாக செல்லமுடியவில்லையா ஒரு குழுவாக சேருங்கள் முறைவைத்து ஒவ்வொருவரும் சென்று பாருங்கள்.

முடிவாக, இங்கே இருக்கும் எம்மைப்போன்றவர்களை உங்கள் பணத்தின் மூலம் கெடுக்காதீர்கள். யாரும் எந்த கேள்வியும்  கேட்க்காமல் பணம் கொடுத்தால் நாங்கள் ஆட்டையைப்போடுவோம். உங்கள் பணத்தின் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்றால் மற்றவர்களுக்கு...

No comments:

Post a Comment