Unilever



பல் துலக்குவதில் இருந்து உறங்கப்போவதுவரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பலவற்றில் இந்த முத்திரை இருக்கிறது. தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளுக்கு இடையே வரக்கூடிய விளம்பரங்களில் பெரும்பாலானவை இவர்களுடையது தான். FMCG Sector என்று அழைக்கப்படும் துறையில் உலகில் மூன்றாவது இடத்திலும்; இந்தியாவில் முதல் இடத்திலும் இருக்கிறார்கள். FMCG (Fast Moving Consumer Goods) என்பது பற்பசையில் துவங்கி தலைக்கு தேய்க்கும் என்னை ; முகத்துக்கு பூசும் பொடி ; குளிப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் துணி துவைக்க பயன்படுத்தும் சலவைப்போடி ; டீ காபி என அன்றாடம் பயன்படுத்தும் பொருட்ட்களை குறிக்கும்.

வணிகர்களாக நுழைந்து நாட்டையே அடிமைப்படுத்தியவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் பற்றி பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறோம். இங்கிலாந்து மற்று டச்சு நாட்டு கூட்டு நிறுவனமான Unilever உலகின் எல்லா மூலையிலும் பரவி இருக்கிறது. இந்திய கூட்டாளியோடு "Hindustan Unilever Limited" என்ற பெயரோடு நாட்டுக்குள் நுழைந்த இந்த நிறுவனம் இப்பொழுது “Unilever Limited" என்ற தனி நிறுவனமாகவே செயல்படுகிறது.


"இந்தோனேசியா நாட்டில் வனம் அழிவதற்கான காரணகர்த்தா இவர்கள் தான்", என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்தோனேசியா நாட்டில், பாமாயில் எண்ணை உற்பத்தி செய்வதற்காக என்ற போர்வையில் அடர்ந்த காடுகளை அழித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து இந்த நிறுவனம் அதிகஅளவில் கொள்முதல் செய்கிறது.

கொடைக்கானலில் இவர்களுடைய தொழிற்ச்சாலை ஒன்று இயங்கிவந்தது. Ponds India Thermometer division என்ற அந்த தொழிற்ச்சாலையில் பணிபுரிந்த பலருக்கு சிறுநீரக கோளாறு ஏற்ப்பட்டது. அந்த தொழிற்ச்சாலையில் இருந்து வெளியேறும் பாதரசம் மூலம் பலருக்கு உடல்நல கேடு விளைந்ததால் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற ஆணையின் காரணமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் அவர்கள் இயங்கிய காலத்தில் புறம்போக்கு நிலத்தில் அவர்கள் கொட்டிவந்துள்ள பாதரச கழிவுகளினால் உள்ளூர் மக்கள் இன்னமும் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அந்த கழிவுகள் இன்றுவரை அப்புரப்படுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment