போலி மாத்திரைகள்.




சில காலத்துக்கு முன்னால போலி மருந்து மாத்திரைகள் பத்தி நிரம்ப செய்திகள் வந்தது. அந்த நேரத்துல மக்களோட அச்சத்த போக்குறதுக்காக சுகாதாரத்துறை சார்பா சில நடவடிக்கைகள் எடுத்தாங்க. அதுல ஒன்னு என்னன்னா, மருந்தகத்துல மருந்து வாங்கும்போது  கொடுக்கப்படும் சிட்டைல மருந்தோட பேரு அதோட விலை மட்டும் இல்லாம, காலாவதியாகும் நாள் மற்றும் Batch number (தொகுதி எண்) குறிப்பிடபட்டிருக்கணும். 

சில வாரங்களுக்கு  முன்னால மருந்தகத்துல மருந்து வாங்கபோயிருந்தோம். மருத்துவர் கொடுத்திருந்த சீட்டுல  மூணு விதமான மாத்திரைகள் இருந்தது. ஒவ்வொரு விதத்துலையும் பத்து மாத்திரை எழுதபட்டிருந்தது. மருந்து மாத்திரைகள வாங்கீட்டு வீட்டுக்கு வந்தபின்னாடி, மருந்தகத்துல கொடுத்த  மருந்து சிட்டைல இருந்த விலை மற்றும் காலாவதியாகும் நாள் ; தொகுதி எண் போன்றதை சரி பார்த்தப்ப காலாவதியாகும் நாள் சரியா இருந்துச்சு ஆனா விளையும் தொகுதி எண்ணும் தவறா இருந்தன

வாங்கினது மூணு அட்டை. ஒவ்வொரு அட்டைலையும்  பத்து மாத்திரை இருக்கு. இத மூனே வரில குறிப்பிட்டு  கொடுத்துறலாம். ஆனா, ஆறு வரீல இருந்துச்சு. பத்து மாத்திரை கொண்ட ஒரு அட்டைய பிரிச்சு ஐந்து ஐந்து மாத்திரைகளா குறிப்பிட்டு வேற வேற தொகுதி எண் மற்றும் விலை குறிப்பிடபட்டிருந்தது. இதபத்தி மருந்தகத்துல கேட்டப்ப "Sorry sir, system error" அப்படீன்னு சொன்னாங்க. இது system error இல்ல.

சுகாதாரத்துரைல இருந்து ஆயிரம் நடவடிக்கை எடுக்கலாம் ஆனா நாம விழிப்புணர்வோட இல்லைனா இப்படி போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளையும் நாம சாப்பிட வேண்டியது தான். இன்னொரு கொடுமை என்னனா  நம்மல்ல பாதி பேரு மருந்து வாங்கும்போது சிட்டை வாங்குறது இல்ல.

No comments:

Post a Comment