முதல் நாள் இன்று...





கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆச்சு இரு சக்கர வண்டி வாங்கி. "வண்டி தயாரா இருக்கு எடுத்துக்கலாம்"னு அலைபேசில சொன்னாங்க. "Bruce லீ இல்லாட்டி ராமகிரிஷ்ணனோட போய் எடுத்துகிட்டு வந்துரலாம் அப்பறம் சனி ஞாயிறுல ஏதாவது ஒரு மைதானத்துல நல்லா கத்துக்கலாம் அப்பறம் நெருக்கடி குறைவா இருக்க சாலைல ஒட்டிப்பாக்கலாம். அதுக்கப்புறம் அலுவலகத்துக்கு கொண்டுபோகலாம்." இது தான் திட்டம். ரெண்டுவேருமே கவுத்துட்டானுங்க நம்ம நாட்டு ஐந்தாண்டு திட்டம்போல அத்தனையும் விளங்காம போச்சு. கடைக்கு போகாம இருந்திருந்தாலாவது ஏதாவது சாக்குபோக்கு சொல்லி சமாளிச்சுருக்கலாம். இப்ப வேற வழி இல்ல. அவ்வளவு நல்லா வண்டி ஓட்டத்தேரியாதுன்னு சொன்னா நம்மளப்த்தி என்ன நினைப்பான் கடக்காரன்?

"அப்படினா வண்டியே ஓட்ட தெரியாமதான் வண்டி வாங்கினையானு", கேக்குறீகளா? இருசக்கர ; நான்கு சக்கர வண்டிகளுக்கான ஓட்டுனர் உரிமம் எனக்கு இருக்கு. ரெண்டு மூனுதடவ ஒட்டீருக்கேன். ஆதர்ஷ் புதுசா வாங்குன அப்பாச்சிய என்ன நம்பி கொடுத்தான். என்னைய முந்திப்போக ஒரு வண்டிக்காரன் முயற்சி செஞ்சான். கடுமையான கோவம் வந்துச்சு. வண்டிய வேகம் எடுத்தேன் வாரிவிட்டுடுச்சு. பின்னால உட்கார்ந்திருந்த ஆதர்ஷ் பறந்துபோய் விழுந்தான். ஆனா பட்டவாளிபய்யன் முழுக்கால்சட்டைல வச்சுருந்த ரெண்டு மருந்து பாட்டிலுக்கும் எந்த சேதாரமும் இல்லாம எந்திருச்சான். ஆனா அவனுக்கு லேசான அடி ; அலைபேசி பழுதாபோச்சு. என்ன நம்பி விஜய் ; செந்தில் போல சிலர் வண்டி கொடுத்துருக்காங்க. சரி அத விடுங்க பேசவந்தத பேசுவோம்.

கடைல இருந்து (அடையார்) க.க. நகர் வரை "நானே" வண்டி ஓட்டுனேன். இடைப்பட்ட தூரத்துல எவ்வளவு நெருக்கடி இருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும். ஆரம்பத்துல சில நேரங்கள்ல விதவிதமா சந்தேகமும் பயமும் வரும். தலைக்கவசத்துல இருக்க கண்ணாடிய போடலைனா காவல்த்துறை டிக்குமோ? யாரையாச்சு மோதீட்டா சென்னை தமிழ்ல திட்டுவாங்களோ? ஆனா இதுவர என்னால சாலைல யாருக்கும் எந்த சேதாரமும் ஏற்ப்பட்டதில்லை. முதநாள் எப்படி பாதுகாப்புனர்வோட வண்டி ஒட்டினேனோ அதே போல இன்னியவரைக்கும் ஓட்டுறேன். தேவை இல்லாம ஒலி மாசு உருவாக்கினது இல்ல. மிதிவண்டில வர்றவங்க ; முதியவர்கள் மாற்றுத்திரனாளிகள் மற்றும் குழந்தைகள் கடந்துபோனா அவங்களுக்கு வழிவிட்டு வண்டி ஓட்டனும்குறது நமக்கு மத்தவங்க சொல்லிக்கொடுத்து தெரியுறது இல்லை நாமளா அனுசரணையா நடந்துக்கணும்.

நேத்து அலுவலகத்துக்கு போயிடிருக்கும்போது ஒரு அக்காவ பாத்தேன். ஒடம்ப சுத்தி பட்டைய போட்டு அதுல குழந்தைய வச்சுக்குட்டு அந்த குழந்தைக்கு தாலாட்டோ என்னவோ தெரியல அது காதுல பாடிகிட்டே வண்டி ஓட்டிகிட்டு வந்தாக. அவங்க தயிரியமும் திறமையும் நினச்சுபார்த்தேன் . இனிமே இன்னமும் கவனமா மத்தவங்களுக்கு எந்த சேதாரமும் பாதிப்பும் வந்துராம வண்டிய ஓட்டணும்ன்னு நினைச்சுகிட்டேன்.

No comments:

Post a Comment