Swiz வங்கி




“மாப்புள, Siwz வங்கீல இருக்க நம்ம நாட்டு பணத்த கொண்டுவந்தா பத்து வருடத்துக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் பண்ணலாம்.”

“பங்காளி, நம்ம நாட்டு கடன எல்லாம் அடைச்சுடலாம்.”

“அவன் கணக்குல இத்தனை ஆயிரம் கோடி இருக்கு இவன் கணக்குல அத்தனை ஆயிரம் கோடி இருக்கு." இப்படி ஆளுக்குதக்கான மாதிரி ஒருதொகைய சொல்லிக்கிட்டு இருக்கது நம்ம வாடிக்கையாபோச்சு.

கஞ்சா பயிருடுறது தப்பு ஆனா அது மூலமா வந்த வருவாய்க்கு வரி உண்டு. பல வருடமா வரி கெட்டாத வணிகர்களுக்கு அவ்வப்போது "சமாதன்" திட்டம் உண்டு. அது என்னனா அரசாங்கமும் வணிக நிறுவனமும் பேரம் பேசி ஒரு முடிவுக்கு வரும். "கருப்பு பணம் வச்சுருக்கவங்கலாம் உங்க பணத்த வந்து அரசாங்கத்துகிட்ட கொடுத்துருங்க நாங்க ஒரு கேள்வியும் கேட்ட்கமாட்டோம்.", இது நிதியமைச்சரா இருந்த திரு. சிதம்பரம் கொண்டுவந்த புரட்ச்சிகர திட்டம். இது தான் நம்ம நாட்டு வரி விதிப்பு மற்றும் வசூலிப்பு முறை.

அப்ப Swiz வங்கீல இருக்க நம்ம நாட்டு பணத்த கொண்டுவர்றதுக்கு வழியே இல்லையா?

"நீங்க பட்டியல் தந்தா அந்த பட்டியல்ல இருக்க உங்க நாட்டுக்காரங்க எத்தன கோடி வச்சுருக்காங்கன்னு சொல்லுறோம்" இது அந்த நாட்டு அரசு கொடுத்திருக்க அறிவிப்பு. நம்ம நாட்டு அரசாங்கம் அதுக்கு பட்டியல தர மாட்டாங்க.

இந்த மாதிரியான நிலைல ஒரு சம்பவத்த நாம கவனிக்கணும். அண்மைல ஜெர்மன் நிதி அமைச்சரும் Swiz நிதி அமைச்சரும் ஒரு உடன்படிக்கை கொண்டுவந்திருக்காங்க. அதன்படி ஜெர்மன் நாட்டுக்காரங்க Swiz வங்கீல எவ்வளோ பணம் வச்சுருக்காங்களோ அந்த தொகைக்கு ஏத்த மாதிரி ஒரு குறிப்பிட்ட விழுக்காடு பணத்த அவங்க கணக்குல இருந்து எடுத்து ஜெர்மன் அரசாங்கத்துக்கு கொடுக்குறதுக்கு Swiz வங்கி ஒத்துக்கிட்டுருக்கு. இப்ப கணக்கு வச்சுருக்கவங்க செத்துட்டா அந்த பணத்துல பாதி பணம் அரசாங்கத்துக்கு கை மாறிடும். ஜெர்மன் அரசாங்கத்த பொருத்தமட்டுல கலவானிக யாருன்னு பட்டியல் கிடைக்காது ஆனா அந்த பணம் உள்ளூருல இருந்தா எவ்வளோ வரி கிடைக்குமோ கிட்டத்தட்ட அதே அளவு பணம் கிடைக்குது.

இனிமே புதுசா கணக்கு தொடங்குரவங்க போடுற பணத்துல குறிப்பிட்ட விழுக்காடு ஜெர்மன் அரசாங்கத்துக்கு கிடைக்குற அதே நேரத்துல கணக்கு வச்சிருக்கவங்களோட பட்டியல் கொடுக்கப்படும். அதாவது உள்நாட்டுல இருக்க வங்கிகள் போலவே எல்லாம் வெளிப்படையா இருக்கும் யாரும் களவாணித்தனம் செய்ய முடியாது.

இந்தியாவுல எப்போ?

No comments:

Post a Comment