விவசாயி



வெளிநாடுகளில் நடைபெறும் பயிற்ச்சிவகுப்புகளுக்கு யாரை அனுப்பலாம் என்ற முடிவை எடுக்கும்போது, அந்த பயிற்ச்சியை பயன்படுத்தி தினமும் யார் வேலை செய்வார்களோ அவர்களை அனுப்பாமல், மேலாண்மை பணியில் இருப்பவர்கள் சென்றுவர பிரியப்படுவார்கள். ஊர் சுற்றிப்பார்ப்பதற்கு இதனை ஒரு சாக்காக பயன்படுத்துவார்கள். நம்மில் பலர் இவ்வாறான சம்பவங்களை நம் அலுவலகங்களில் பார்த்திருப்போம். "இதெல்லாம் யாருயா கண்டுபிடிச்சது" என்ற காட்டம் நம்மில் பலருக்கு இருக்கும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதி வெளிவந்த "அறுவடை" என்ற சிறுகதையில் இந்த கேள்விக்கான விடை இருக்கிறது. காங்கிரஸ் ஆட்ச்சியிலே (மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ; கர்மவீரர் காமராஜர் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது) வெளிநாடுகளில் விவசாயம் எப்படி நடைபெறுகிறது என்று பார்த்துவருவதர்க்காக சிலரை அனுப்பிவைத்துள்ளார்கள். அப்படி சென்று வந்தவர்கள் யாரும் வயலில் இறங்கி வேலை பார்த்த விவசாயிகள் கிடையாது.

அதன் பின்னர் திரு C. சுப்ரமணியன் அமைச்சராக இருந்தபோது பசுமைப்புரட்சி ஏற்ப்பட்டது என்பதனை நாம் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம். அதில் ஈடுபட்டவர்களில் திரு. M.S. சுவாமிநாதன் அவர்களும் ஒருவர். அதிக உற்பத்தி என்ற முழக்கத்தோடு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பழுதாய்ப்போன நிலங்கள் பஞ்சாபிலும் மற்ற மாநிலங்களிலும் நிரம்ப கிடைக்கின்றன. ஈழத்தில் போர் நிறைவடைந்த சில மாதங்களில் புனரமைப்பு பணிகள் என்ற பெயரில் அங்கேயும் பசுமை புரட்சி ஏற்ப்படுத்த திரு. M.S. சுவாமிநாதன் அவர்கள் ஆயத்தமானார்.

இந்த பின்னணியில் அண்மையில் ஒரு நல்ல சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற திரு. வெங்கடபதி அவர்களை கலைஞர் தொலைக்காட்ச்சி சார்பாக திரு. ரமேஷ்ப்ரபா பேட்டிகண்டார். மேதினத்தன்று ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் இருந்து இரண்டு சம்பவங்கள். 1. விருது பெற சென்றபோது நடிகர்கள் மற்றும் கிரிகெட் வீரர்களோடு பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கலாம். பத்திரிக்கைகள் உட்பட யாரும் இவரை கண்டுகொள்ளவில்லையாம். 2. ISRALE நாட்டுக்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் எடுத்துள்ளார்.

நாடு விடுதலை அடைந்து அரை நூற்றாண்டு காலம் கடந்த பின் இப்பொழுது தான் ஒரு விவசாயியால் வெளிநாட்டில் இருக்கும் தொழில்நுட்பத்தை கற்க வழி பிறந்திருக்கிறது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இது பாராட்டத்தக்கது. திரு. வேங்கடபதி அவர்களைப்போலவே ஏழை விவசாயி ஒருவருக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்க இன்னம் கால் நூற்றாண்டு காலம் பிடிக்குமோ தெரியவில்லை.

பொறுமையுடன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி.

No comments:

Post a Comment