மரம் (இயற்க்கை குளுரூட்டி)


“அக்னி நட்ச்சத்திரம் வந்திருச்சு. கத்திரி வெயில் மண்டைய பிளக்குது." பெரும்பாலும் அலுவலகங்களில் குளிர்சாதன அறையில் வேலை செய்பவர்களுக்கு வெயிலின் தாக்கம் ராத்திரி தூங்கும்போதும் ; சனி ஞாயிருளையும் நல்லா தெரியும். உடனே அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்றார்போல மேசை விசிறி ; குளிர்சாதன கருவின்னு வாங்கியார கிளம்பிடுவோம்.

இப்படித்தான் சென்ற வருடம் நாங்களும் கடைக்கு போனோம். "Air Conditioner" "Air Cooler" ஒவ்வொன்னா பார்த்தோம். ஒவ்வொன்னுலையும் இருக்க நிறை குறைகள விற்பனை பிரதிநிதி விளக்கினாரு. இப்படி மூணு கடை ஏறி இறங்கினோம். பொருளாதார நிலைமையை யோசிச்சும்; நாடோடிபோல வாடகை வீட்டை மாத்திகிட்டு இருக்கத யோசிச்சும் "Air Cooler" வாங்குற முடிவுக்கு வந்தோம்.

கடையில் இருக்கும் போது குளிர்காத்த வீசிய "Air Cooler" வீட்டுக்கு வந்ததும் அனல் காத்த வீசியது. ஒண்ணுமே புரியல. கடைக்காரர்கிட்ட கேட்டா, அவங்க சொன்னாங்க, "ICE CUBES போட்டா குளிர் காத்து வரும் சார்". இதுக்காக "FRIDGE" ஆ வாங்க முடியும்? இதுக்கு AC ஏ வாங்கிருக்கலாம் போல. கடைக்கு போய் ஐஸ் கட்டி வாங்கி வந்து இயக்கி பார்த்தோம். குளிர் காத்து வந்துச்சு. அப்பாடான்னு படுத்தா, ஒரு ஒருமணி நேரத்துல அப்படியே தீஞ்சுபோனா வாட அடிச்சது. அதபத்தி கடைக்காரர்கிட்ட கேட்டா அவரு சொன்னாரு, "ஓட ஓட நல்லா இருக்கும் சார்".

பொதுவா எல்லா கடைலயும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டு அறைகள் முழுவதும் சில்லுனு இருக்கும். அங்க "Air Cooler" இயக்கிபாத்தா குளிர் காத்துதான் வரும். இந்த Common Sense இல்லாமல் வாங்குனதால தெண்ட செலவா போச்சு.

நம்ம நாட்டுல, பசுமை கட்டிடங்கள் அதிகம் இருக்ககூடிய மாநிலங்கள் பட்டியல்ல, தமிழ்நாட்டுக்கு முதல் இடம் கிடச்சுருக்கு. நகரங்கள் பட்டியல்ல சென்னைக்கு தான் முதல் இடம். அந்த பட்டியல்ல புதிய தலைமை செயலகம் ; அண்ணா நூற்றாண்டு நூலகம் ; Express Avenue ; Olympia Tech Park மட்டும் இல்ல மடிப்பாக்கத்துல ஒரு வீடும் இருக்கு. இத நெனச்சு நாம பெரும படலாமா?

வீட்டுக்கு பின்னாடி இருந்த வீட்ட இடிச்சுட்டு அடுக்குமனை கெட்டுறாங்க. அங்க இருந்த ஏழு எட்டு மரத்த இடிச்சுட்டாங்க. இனிமே வெயிலோட தாக்கம் அதிகமா இருக்கும். புது வீடு கெட்டும்போது வானம் தோண்டுரதுக்கு முன்னாடி பூசை போடுறாங்க. அது எதுக்குன்னா அந்த வீடுகெட்டும் போது அழிஞ்ச மரம் செடி கொடி ; சின்ன சின்ன பூச்சிகளுக்காக. அப்படியே நாலா மரத்த நட்டுவச்சு வளத்தாங்கன்னா நல்லா இருக்கும்.

சிலரோட கல்யாணத்துல மரம் நடுறது ஒரு சம்ப்ரதாயமா இருக்கு. இந்த நல்ல பழக்கத்த எல்லாரும் பின்பற்றுனா நல்லது. ஏற்காடு போல சில இடங்கள்ள ஒரு திட்டம் இருக்கு. அரசு தோட்டகலை அலுவலகத்துல பணம் கெட்டியாச்சுனா நம்ம பேருல ஒரு மரத்த நடலாம். அவங்க பாதுகாப்பாங்க.

இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னா, சின்ன வயசுல பள்ளிக்கூடம் போரதுனாவே வேப்பங்காயா கசக்கும். பள்ளிக்கூடம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் தின்பண்டம் சாப்பிட்டுட்டு பக்கத்துல இருக்க ஆலமரத்துல விளையாடுவோம். அவ்வளோ நல்லா இருக்கும். கீழ விழுந்து ரெத்தம் சிந்தி அடிபட்டாலும் திரும்ப திரும்ப அங்க போய் விளையாடுவோம். இப்ப அந்த மரம் இருந்ததுக்குண்டான தடையமே இல்ல.

நம்ம பிள்ளைக விளையாடுறதுக்கு மரமே இல்லாம வெட்டி தீத்துட்டா, சின்ன தம்பி படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி நம்மள வையப்போராக...நல்லா யோசிச்சுக்கோங்க... 

No comments:

Post a Comment