Power Cut நல்லது...

சினப்பயலா இருக்கும்போது ராத்திரீல எப்பவாச்சு Power cut ஆகும். அந்தமாதிரி நேரத்துல பயகலாம் சேர்ந்து ஒண்ணா விளையாடுவோம். 

பெரும்பாலும் பேய் கதைகள் சொல்லி விளையாடுறது. அதுல சில போட்டிகள் வச்சுக்குறது. யார் அதிக நேரம் கதை சொல்லறது... அதிக நேரம் பயப்படாமல் இருட்டில் இருப்பது... இப்படி...

"ஒருமுறை எங்க ஊருல ஆயாவோட ராத்திரி ரோட்டுல போய்கிட்டு இருந்தேனா, ஒரே இருட்டு அப்ப சுடுகாட்ட தாண்டி போகும்போது ஒரு குரல் அழுகுற மாதிரி கேட்க்கும். என்ன சத்தாம் ஆயான்னு கேட்டா, எங்க ஆயா ஒரு கத சொல்லுச்சு" இப்படி ஆரம்பிச்சு கத சொல்லுவாங்க பசங்க. சுத்தி நின்னு கதை கேட்ப்போம். ஒரு சிலர் பயந்துபோய் பாதியிலேயே போய்டுவாங்க.

"பயந்தாகோலி பசங்களா, எங்க ஊருல நானெல்லாம் ராத்திரில சுடுகாட்டுக்கு தனியா போயிருக்கேண்டா. இந்த கதைக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்." அப்படீன்னு சிலபேரு அள்ளி விடுவானுக.

இப்படி மிச்சமீதி இருக்க பசங்கலாம் சேர்ந்து TWO WHEELER SHED க்கு போய் அடுத்த விளையாட்ட ஆரம்பிப்போம். யாரு அதிக நேரம் தனியா அங்க இருக்கதுன்னு. அதுல ஒவ்வொருத்தரா வெளியேறிடுவாங்க, "அடுத்து நாமதான் அடுத்து நாமதான் மாட்டபோறோம். எப்படி தாக்குபுடிக்கபோரோம்ன்னு", நினைச்சிகிட்டு இருக்கும்போதே திடீர்னு Current வந்துடும். அப்பா தப்பிச்சோம்டானு ஒரே ஓட்டமா வீட்டுக்கு போய் தூங்கிடுவோம்.

அடுத்தநா காலைல பார்த்தா பசங்க எல்லாரும் பேசிப்பாங்க டேய் அவன் ரொம்ப தைரியசாளிடா.. ஆனா அவிங்களுக்கு தெரியாது ராத்திரி நான் படுக்கைல மூச்சா போனது.

ஆனா இந்த விளையாட்டு கொடுத்த தெம்புல பள்ளிக்கூடத்துல கல்லூரில என்னபன்னுவோம்னா, எழுதாத practical record நோட்ட போய் submit பண்ணுவோம்.

நேத்து ராத்திரி Power cut ஆனப்ப நம்ம வீட்டுக்கு கீழ பயக விளையாடிகிட்டு இருந்தது கேட்டுச்சு.

அடிக்கடி ராத்திரில power புடுங்கி விடுங்க பயலுக விளையாடட்டும்... Power Cut நல்லது...



13 மார்ச்

No comments:

Post a Comment