இயற்க்கை சீற்றம்

காதலை மட்டுமில்லை தானத்தையும் கூட பெத்தவங்க காசுல செய்யகூடாது.

"சம்பளத்த வாங்கிகிட்டு மதுரை தெக்கு மாசி வீதில போய்கிட்டு இருந்த ஒருத்தரு தன்னோட சம்பள பணத்த மொத்தத்தையும் கொடுத்ததோட நிக்காம கையில போட்டுருந்த கல்யாண மோதிரத்தையும் பூகம்ப நிதியா கொடுத்துருக்காரு. கோயம்பத்தூருல பள்ளிக்கூடத்துல படிக்குற பசங்க ரெண்டு பேரு அந்த பக்கம் போரவரவங்களுக்கு ஷூ பாலீஷ் போட்டு சம்பாதிச்ச பணத்த பூகம்ப நிதியா கொடுத்தாங்க." - இந்த செய்தி எல்லாம் குஜராத் பூகம்பம் முடிஞ்சதுக்கப்புறம் செய்தித்தாலுல வந்தது.

சரி நம்ம பங்குக்கு ஏதாவது செய்யணும்னு முடிவுபண்ணி எங்க கல்லூரில உண்டியல் குலுகினோம். அந்தந்த துறை மாணவ செயலாளர்கள் அவங்கவங்க துறை மாணவர்கள் கிட்ட வாங்கி மொத்தமா பணம் கொடுத்தாங்க. நிறைய நிதி வந்தது. ஒரு சிலரு பணம் குறைவா கொடுத்திருந்தாங்க இன்னம் சிலர் ஒன்னும் கொடுக்கல. அவங்க மேல அப்படி ஒரு கடுப்பு வந்தது. என்னடா இப்படி கஞ்ச பிசினாரிகளா இருக்காங்களேன்னு.

இன்னைக்கு தானே புயல் நிவாரண நிதி கேக்குது அரசாங்கம். அதுக்கு நம்ம பதில் என்ன? சம்பாதிக்கிற காசுல கால்வாசிய வரின்னு சொல்லி புடுங்கிடுறீங்க. அது போதாதுன்னு ஒரு நாள் சம்பளத்த புடுங்கிகிறீங்க. இதுக்கு மேல நாங்க எங்கடா நிதி கொடுக்குறது.



15 மார்ச்

No comments:

Post a Comment