மனப்பாங்கு

இங்க அலுவலகத்துல வேலை செய்யுற நண்பருக்கு IIM Bengaluru ல இடம் கிடச்சுருக்கு. நம்மகிட்ட வந்து சொன்னதும் மனசுக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு. மதியம் சாப்பாட்டு நேரத்துல இதபத்தி பேசிகிட்டு இருந்தோம். 

நண்பர் சொன்னாரு, "அவனுக்கென்ன உள்ள ஆளு இருக்கும் அதான் கிடைச்சிருக்கும்."

இப்ப இன்னொரு நண்பர் ஆராய்ச்சி படிப்புல சேர்றதுக்கு விண்ணப்ப படிவத்த பூர்த்தி செஞ்சுகிட்டு இருந்தாரு.

நண்பர் சொன்னாரு, "அவனுக்கென்ன Quota இருக்கு இடம் கிடைச்சுரும்."

நாமளும் முயற்சி செய்ய மாட்டோம் முயற்சி செயய்ரவனையும் விடமாட்டோம்.

No comments:

Post a Comment