திருமணம்

எட்டயபுரத்தில் பாரதியின் இல்லத்துக்கு பக்கத்தில் வட்டப்பாறை என்று ஒன்று உண்டு திருமணமான தம்பதியினர் அங்கே வந்து அந்த வட்டபாரையை தொட்டு வணங்குகிறார்கள். இது எதற்க்காக என்று அங்கிருந்த பெரியவரை பார்த்து கேட்டேன். அவர் சொன்னார், 

பதினாறாம் நூற்றாண்டிலேயே ஒருவருக்கு பெண் கொடுப்பதற்கு அந்த ஆண்மகனின் உடல்பலத்தை சோதிப்பதற்காக இந்த பாறையை வைத்திருந்தார்கள். அப்பொழுது இந்த பாறையை தூக்கி சில தூரம் ஓடவேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அந்த போட்டியின் விதியை சற்று தளர்த்தினோம். இந்த பாறையை தலை மீது தூக்கி கீழே போட்டால் போதும் பெண் கொடுத்துவிடலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே விதியை இன்னும் சற்று தளர்த்தி, இந்த பாறையை தள்ளினாலே பெண் கொடுத்தோம்.

இந்த நூற்றாண்டிலே விதி மேலும் திருத்தப்பட்டது இந்த பாறையின் மீது விழுந்து வணங்கினால் போதும்.அதுவும் திருமணம் செய்தபின்.

இன்று ராஜ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பட்டிமன்றத்தில் நடுவராக இருந்த திரு. நாஞ்சில் சம்பத் பேசியதை மறுஒளிபரப்பு செய்வதில் மகிழ்கிறேன்.



16 ஜனவரி
posted in Facebook

No comments:

Post a Comment