தமிழ்

ஆமா அது என்னடா ஜனவரின்னு போட்டா இங்கிலிசு..சனவரின்னு போட்டா தமிழா???
உங்க தமிழ் பற்றுல தீயை வைக்க... - சகோதரர் பூபதி.

சனவரி என்று போட்டுவது தப்பு இல்லை. ஆம் அது ஆங்கில மாதம் தான்.

ஆங்கில மாதத்தை ஆங்கில எழுத்தில் எழுதும்போது குழப்பம் இல்லை. தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவது என்ன தப்பு.

நம் பெயரை பிரெஞ்சுக்காரன் எழுதினால் அவன் எழுத்தில் எழுதுவான். என்ன உச்சரிப்பு என்பதற்கு சிலகுறியீடுகள் இருக்கும். ஆனால் கண்டிப்பாக நீங்கள் தமிழர் என்பதால் தமிழ் எழுத்தையோ அல்லது வழக்கில் இல்லாத மொழியின் எழுத்தை கடன்வாங்கியோ கண்டிப்பாக எழுத மாட்டான்.

உண்மையானா தமிழ் மாதத்தின் பெயரை பதாகைகளில் எழுதினால் சிறப்பாக இருக்கும். அதை நாம் தான் செய்யவேணும்.

கலைஞர் கருணாநிதி பேரன் தமிழ் பெயர் வைத்தால் ராமதாசின் பேத்தி தமிழ் வழிக்கல்வி பயின்றால் நானும் என் பிள்ளையை தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிடுவேன். தமிழ் பெயர்வைப்பேன் என்று சொன்னால்... வேறு கடுமையான வார்த்தை கொண்டும் கேள்வி கேட்கமுடியும்..

இருந்தாலும் மென்மையான வார்த்தையில் கேட்கிறேன். உங்கள் மூளை கருணாநிதி அல்லது ராமதாசு மண்டையில் இருக்கிறதா இல்லை அவன் செய்தால் அதுபோலவே நானும் செய்வேன் என்று சொல்ல நாம் என்ன குரங்குகளா?



28 ஜனவரி
posted in Facebook

No comments:

Post a Comment