சென்னை புத்தக கண்காட்சி 2012

சென்னை புத்தக கண்காட்சி 2012

உள்ளே செல்வதற்கு முன் சில சாகசங்கள் செய்யவேண்டியிருந்தது.

முதல் நிலையகத்தில் உழவு சார்ந்த புத்தகங்கள் கிடைக்கபெற்றன.

பெரும்பாலான அரங்குகளில் கவிஞர் வைரமுத்துவின் படம் அல்லது படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

மலையாள மனோரமா நிலையகத்தில் கூட்டம் இருந்தது. அந்த நிலையகத்தை இரண்டு காவலர்கள் காவல் காத்துக்கொண்டு இருந்தார்கள். அது ஏன் என்று புரியவில்லை.

நக்கீரன் நிலையகத்தில் கூட்டம் அதிகம் தான். சின்ன குத்தூசி அரங்கம் என்று அவர்களின் நிலையகத்தை பெயரிட்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது.

காலச்சுவடு கிழக்கு பதிப்பகங்களின் அரங்கங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளுக்கென்றே சில நிலையகங்கள் இருந்தன. ஆனால் குறிப்பிடும் அளவு கூட்டம் அங்கே இல்லை.

உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பதிப்பகம் நடத்துபவர்களுக்கு ஏமாற்றத்தையும் வியாபாரிகளுக்கு ஆதரவையும் நாம் கொடுத்திருக்கிறோம்.

வருமானம் இல்லை என்றாலும் தொடர்ந்து பயிரிடுகிறான் உழவன். இல்லை என்றால் நிலம் தரிசாகிடுமே...

No comments:

Post a Comment