தமிழுக்கான சந்தை (1)

நாம் கட்டும் வரிப்பணத்தின் மூலமாக வரிச்சலுகை பெரும் திரைப்படத்துரையில் தமிழ் எப்படி இருக்கிறது. இந்த வாரம் திரையரங்கத்துக்குச் சென்றபோது (நாங்கள் பார்த்த இரண்டு படங்களுமே தமிழ் படங்கள்.)

சில வணிக விளம்பரங்கள் தமிழிலும் பல விளம்பரங்கள் ஆங்கிலத்திலும் இருந்தது. திரையரங்கம் சார்பாக வெளியான அறிவிப்பு எதுவுமே தமிழில் இல்லை.

கழிப்பறை முதல் அனைத்து இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் ; திசை காட்டி / signages எதிலுமே தமிழ் இல்லை.

திரைப்படத்துக்கான அனுமதி சீட்டு தமிழில் இல்லை.

ஆலோசனைகள் / முன்னேற்ற வாய்ப்புகள் இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள் என்ற அறிவிப்பைக்கூட ஆங்கிலத்தில் தான் வெளியிடுகிறார்கள். இது சரியா?

ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் உள்ளன என்பது வேறு. ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பு என்பது வேறு.

இது குறித்து அந்த திரையரங்கத்தாருக்கு WhatsApp மூலம் புகார் அளித்தபோது ஆங்கிலத்தில் பதில் கூறினார்கள். தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லையா அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்ற உத்தரவா? என்று வினா எழுப்பினேன்.

நேற்று திரையரங்க மேலாளர் அலைபேசியில் அழைத்து பேசினார். நடைமுறை சிக்கல்களை எடுத்துச்சொன்னார். இதுவரை யாரும் இப்படி கேட்டதில்லை. நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்று சொன்னார். (கண்டிப்பாக பலரும் புகார் தெரிவித்திருப்பார்கள்)

உரிய தீர்வு கிடைக்கும் வரை விடப்போவதில்லை. திரைத்துரையில் இருப்பவர்கள் இதற்காக முதலில் குரல் கொடுக்கட்டும் அதன் பின் மற்ற விடயங்களுக்கு வரட்டும். இயக்குனர் கரு.பழனியப்பன் போன்றவர்களாவது இது குறித்து யோசிபபார்கள் என்று கருதுகிறேன்.


ATM முதல் அவ்வப்போது இது போன்ற நடக்கும் தமிழ் புரக்கணிப்புகளை நம்மில் பலரும் பல வருடங்களாக சுட்டிக்காட்டி மாற்றத்தை கொண்டு வருகிறோம் ஆனால் ஒருங்கிணைத்த எதிர்ப்பை பதிவு செய்து மாற்றத்தை கொண்டுவருவது விரைவான வழியாக இருக்கும். 


சம்பவம் நடந்தது மார்ச் 7 ஆம் நாள் 2017. 

Whatsapp மூலமாக புகார் அளித்தது மார்ச் 8 ஆம் நாள் 2017.  (Whatsapp எண் : 8939484000)

மறுமொழி வந்த நாள் மார்ச் 9 ஆம் நாள் 2017.

நிறுவனத்தின் மேலாளர் என்னிடம் தொலைபேசியில் பேசிய நாள் : மார்ச் 9 ஆம் நாள் 2017. (7358773662)

Facebook இல் முதல் பதிவு மார்ச் 9 ஆம் நாள் 2017

No comments:

Post a Comment