OPS தமிழரா ?

OPS தமிழரா என்ற சூடான விவாதம் நடைபெறுகிறது.


OPS விடயத்துக்கு போகும் முன்... நவீன் பட்நாயக் மற்றும் கருணாநிதி ஆகியோரை பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
நவீன் பட்நாயக் அவர்களுக்கு, அவர் ஆளும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை கிடையாது (ஒரியா). ஆனால் அந்த மாநிலத்து மக்களுக்கு உண்மையாக இருக்கிறார். இங்கே கருணாநிதி அவர்களுக்கு அவர் வாழும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை உண்டு ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கிறாரா என்றால் இல்லை என்ற பதில் தான் அவருடைய வாரிசுகளிடமிருந்தே வரும்.  




மொழிப்புலமை என்பது அவசியம் என்றாலும் கூட, உயர்வு வேண்டுமென்றால் தூய குருதியும் உணர்வும் வேண்டும்.

திரிவடுக கட்சிகளில் இருக்கும் எவருக்கும் அந்த உணர்வு இருக்க முடியாது. கட்சி ; தலைமை என்ற உணர்வே மேலோங்கி இருக்கும். "என் உயிர் தோழன்" படத்தில் வரும் தொண்டனைப்போல.

இருந்தாலும் கூட, அ.தி.மு.க. வில் இருப்பவர்களை ஏன் தமிழர்கள் என்று சொல்லுகிறோம்?

என்னுடைய தெரிவு யார் என்றால், முதல்வர் பொறுப்புக்கு திரு. Jayakumar. சுனாமி சமயத்தில், இறங்கி வேலை செய்ததால் இவரை சொல்லுகிறேனா? இல்லை. இவரால் கட்சிக்கு ஒரு தேர்தலில் வெற்றி பெற்று தர முடியுமா என்றால், சந்தேகம் தான்.

ஆனால், இவர் வந்தால், மீனவர் விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பார் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது. கடிதங்கள் எழுதிக்கொண்டிராமல் காலத்தில் நிச்சயம் குதிப்பார். ஒருவேளை மீனவர் யாராவது தவறு செய்தால் உரிமையோடு கடிந்து அவர்களை வழி நடத்துவார்.


கட்சி பணிக்கு / பொதுச்செயலாளர் பணிக்கு, திரு. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பான தேர்வாக இருக்கும். ஒருங்கிணைக்கும் பணியில் தேர்ந்தவர் என்ற காரணத்தினால் தான் தேர்தல் பரப்புரைகளுக்கான திட்டமிடும் பொருப்பு இவர் வசம் பல முறை வந்தது.


சரி நத்தம் ; தம்பிதுரை ; பொன்னையன் போன்றவர்கள்? அவரவர் வியாபாரத்தை அவரவர் கவனித்துக் கொண்டு இருப்பது நலன் பயக்கும்.

சரி மீண்டும் தலைப்புக்கு வருவோம். எந்த அடிப்படையில் இவர்களை நம்புவது அல்லது தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்வது? இதற்கான பதிலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு பொது தேர்தலில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று சொன்னார். இன்றைக்கு கேட்கப்படும் எல்லா கேள்விகளையும் அன்று கவிதாயினி தாமரை எழுப்பினார்.

செல்வி Jayalalithaa, ஈழ போராட்டத்துக்கு எதிரானவராயிற்றே அவரை எப்படி நம்புவது?

பன்நெடுகாலமாக கருணாநிதி, தமிழின தலைவர் வேடத்தை பூண்டிருந்தார். இன்றைக்கு அந்த வேடத்தை தரிக்க, அன்று செல்வி. JJ தயாரானார். கொள்கை முரண்பாடு இருந்த போதும் அவர் அந்த முடிவை எடுக்க காரனம் என்ன?

1) புலிகளை வீழ்த்திவிட்டோம்.
2) கருணாநிதி மீதான நம்பகத்தன்மை சிதைந்து விட்டது.
3) ஈழத்துக்கான சந்தை அப்படியே இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரி 2011 தேர்தலில் வென்றபின் பழைய குருடி கதவை திரடி என்று இருந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்கு காரனம் என்ன?

1) MGR க்கு மக்களிடம் தலைமுறைகள் தாண்டி நிரந்தர செல்வாக்கை பெற்றுத்தந்தது ஈழம் தானே. நாமும் உண்மையாக நடந்துகொண்டால் நாம் நிரந்தர முதல்வராக இருக்கலாம்.

2) அகவை 60 கடந்துவிட்டோம் இனிமேலாவது, பரிவானவர் இவர் என்ற பெயர் எடுக்க ஆசைபட்டிருக்கலாம். புண்ணியம் தேடலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கலாம்.

3) அதோடு சேர்ந்து, யாருமற்ற நம்மீது இவ்வளவு பரிவு காட்டுகிறார்களே. நாமும் பரிவு காட்டலாம் என்ற என்னமும் வந்திருக்கலாம்.

தூய்மையான அன்பும் பரிவும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்த முடியும்.

கோமாளி புலிக்கேசி ஒருகட்டத்தில் உணருவது போல, அ.தி.மு.க. வில் இருக்கும் இவர்களும் உணருவார்கள் என்ற எண்ணம் தான் இவர்களை இன்றைக்கு ஆதரிக்க நமக்கு இருக்கும் காரணமாக இருக்க முடியும்.

இப்போது இருக்கும் வாய்ப்பையும் தவர விடுவதில் நியாயம் இல்லை. உள்ளத்தூய்மையும் உறுதியும் கொண்ட ஒரு முழுமையான ஒரு தமிழன் / தமிழச்சி தலைமை பொறுப்புக்கு வரும் வரை வேறு வழிகள் எனக்கு தென்படவில்லை.

தேர்தலில் தோல்வியை தழுவிய பிஜேபி மற்றும் திரிவடுக காட்சிகள் இப்போது கொல்லைப்புறமாக அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி உங்களுக்கு வருமேயானால்...

நெடுஞ்செழியன் ; திருநாவுக்கரசு ; STS ; பண்ருட்டியார் ; இராம. வீரப்பன் என்று பலரையும் தாண்டி தான் செல்வி JJ இங்கு காலூன்றினார். நாம் ஒன்றும் கர்நாடகத்துக்கு சென்றோ அல்லது ஆந்திராவுக்கு சென்றோ யாரிடமிருந்தும் எதையும் தட்டிப்பறிக்கவில்லை.

No comments:

Post a Comment