தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 18



தாய்மொழி வழி கல்வி பத்தி நிறைய பேசுறோம். ஆனா அரசாங்க பள்ளிகள்ல ஆங்கில வழி கல்விய துவக்கியாச்சு. தி.மு.க. ஆட்சில மாநகராட்சி பள்ளிகள்ல துவகினாங்க ; அ.தி.மு.க. ஆட்சில அத மத்த பள்ளிகளுக்கு விரிவாக்கம் செஞ்சிருக்காங்க. கேட்டா மக்கள் ஆங்கில வழி கல்விய தான் விரும்புறாங்க. இதுக்காக, அரசாங்க பள்ளிகள்ல விட்டுட்டு தனியார் பள்ளிகளுக்கு போறாங்க. இனிமேல் மக்கள் அரசாங்க பள்ளிகள்ல படிக்கவைப்பாங்க.

ஒருவேளை மக்களுக்கு ஆங்கில வழில தான் படிக்கணும்னு ஆசை இருந்தா அந்த எண்ணம் எதனால இருக்கு? ஆங்கிலேயர்கள் / கிருஸ்தவர்கள் வந்து தான் இங்க கல்விய கொடுத்தாங்க அப்படீங்குற திட்டமிட்ட தவறான பரப்புரை தான் அதற்கு காரணம். சென்னையில் இருக்கும் பள்ளிக்கல்வி துறை வளாகத்தின் பெயர் DPI (Department of public Instructions).

பல மொழிகள் பேசுற மக்களை கொண்ட நாடுகள அடிமைபடுத்தும் போது, அவன் சொல்லுறது எல்லாருக்கும் புரியணும்னா ஒரே மொழி இருந்தா லேசா இருக்குமேன்னு தன்னோட மொழிய புகுத்தினான். கல்விய, அறிவு அபிவிருத்திக்கான வழிமுறையா பாக்காம வெறும் அறிவிப்புகள கொண்டுபோய் சேக்குற ஒரு வழியாகவும் ; தனக்கான குமாஸ்த்தாக்களை உருவாக்குற வழிமுறையா தான் பார்த்தான் ஆங்கிலேயன். அதனால, ஆங்கிலம் படிச்சா பெரிய வேலைவாய்ப்பு கிடைக்குங்குற எண்ணம் மக்கள் மனசுல பதிஞ்சு போச்சு.

விடுதலைக்கு பின்னாடியும் அதே நிலைதான் இன்று வரை தொடருது. தமிழால் ஆட்சிக்கு வந்த திரிவடுக கட்சிகள் அந்த நிலையை மாற்றவே இல்லை. வேலைவாய்ப்பு பெருக்கம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான விபரங்களை "எங்கும் தமிழ் ; எதிலும் தமிழ் ; என்றென்றும் தமிழ்" என்ற பகுதியில் தனியாக பார்க்கலாம்.

ஒரே ஒரு விடயத்தை மட்டும் இங்கே பார்க்கலாம். தமிழ் மொழியில் அறிவியல் இல்லை என்று திரிவடுக நபர் ஒருவர் ஊடகத்தில் பேசினார். தமிழ் மொழியில் அறிவியல் இல்லை என்றால் சோழ மன்னர்கள் கட்டிய பெரிய கோவிலில் உள்ள கட்டட கலை அறிவியல் ; கடல் தாண்டி பல நாடுகளுக்கு சென்ற தமிழ் மன்னர்களுக்கு இருந்த கப்பல் கட்டுமான அறிவியல் ; வளரி என்கிற ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்கலை அறிவியல் ; மன்னராட்சியிலும் மக்கள் ஆட்சியை செயல்படுத்திய மேலாண்மை அறவியல் ; நீர் மேலாண்மை அறிவியல் என்று எவ்வளவோ உண்டு.

தமிழ் வழில பொறியியல் கல்வி பயிலக்கூடிய வசதிய தி.மு.க. அரசாங்கம் ஏற்ப்படுத்துசு. தினமலர் ல வருடா வருடம் ஒரு செய்திய வெளியிடுவாங்க. தமிழ் வழில ஆர்வமா சேர்ந்த பல பேருக்கு வேலை கிடைக்கல ; அதனால தமிழ் வழி படிப்புல சேர்றதுக்கு யாரும் விரும்புறது இல்லை.

குடும்ப மருத்துவர் சொல்லுவார், "மருத்துவ படிப்பு படிக்கும் போது இங்கே எல்லாமே ஆங்கிலத்தில் சொல்லித்தருவார்கள். புரியாத பல தலைப்புகளுக்கான தமிழ் புத்தகங்கள் யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து சில பிரதிகள் கிடைக்கும். அதைவைத்து நாங்கள் படிப்போம்". சிங்களவன் யாழ் நூலகத்தை கொளுத்தினான். இங்கே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போய் பார்த்தால், தமிழ் மொழிக்கு ஒரே ஒரு தளம். மற்ற தளங்களில் துறை வாரியாக ஆங்கில புத்தகங்கள். துறைவாரியா தமிழ் புத்தகங்களை குவிக்க வேண்டாமா? அந்த நூலகத்துக்கு புது நூல்கள் கொள்முதல் செய்வதையே நிறுத்தி உள்ளார்கள். சிங்களவன் செய்த வேலையை திரிவடுகர்கள் வேறு விதமாக இங்கே செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment