தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 16

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 16

குலக்கல்வி திட்டத்துக்கு திராவிட கட்சிகள் மட்டும் இல்லாம காங்கிரஸ் கட்சியிலும் பலத்த எதிர்ப்பு இருந்துச்சு. அதனாலையே ராஜாஜி பதவி விலகினாரு. இதன் காரணமா திரு. காமராசர் அவர்கள் 1954 ல முதல்வர் ஆனாரு. முதல்வர் ஆகி 5 வருடம் கழிச்சு 1959 ல Madras IIT கொண்டுவர்றதுக்கு அன்றைய ஆளுநர் திரு. பிஷ்ணுராம் மேதி கூட சேர்ந்து முயற்சி எடுத்திருக்காரு. முதல்வர் ஆகி கிட்டத்தட்ட 8 வருஷம் கழிச்சு, 1962–63 கல்வி ஆண்டுல மதிய உணவு திட்டத்த மீண்டும் கொண்டு வந்தாரு. 

அதாவது, குலக்கல்வி திட்டத்த எதிர்த்து ஆட்சிக்கு வந்த கர்ம வீரர் காமராசர் தன்னுடைய முதல்வர் பதவிய துறக்குரதுக்கு சில காலத்துக்கு முன்னாடி மதிய உணவு திட்டத்த கொண்டு வந்தாரு. காங்கிரஸ் அரசாங்கம் நிதிநிலை அறிக்கைல கல்விக்கு நிதி ஒதுக்குனது குறைவு. அதுவும் மதிய உணவு திட்டத்துக்கு ஒதுக்குன நிதி எவ்வளவுன்னு பாத்தா ரொம்ப பெருசா ஒன்னும் இல்ல. மதிய உணவு திட்டத்தின்படி தினம் காலைல வாத்தியார் ஊருக்குள்ள போய் அரிசி பருப்ப யாசகமா வாங்கீட்டு வந்து சமையல் செஞ்சு பிள்ளைகளுக்கு மதிய உணவு போடணும்.

அப்படினா பாடம் எடுக்குறது யாருன்னு கேகுறீங்களா? அதே வாத்தியார் தான். சட்டசபைல இத பத்தி விவாதம் வந்தது. பிள்ளைகளோட படிப்பு கெடுமே. நிதி இல்லைனா இந்த திட்டத்த செயல்படுத்த முடியாதேன்னு எல்லாரும் கேட்டாங்க. அதுக்கு முதல்வரா இருந்த திரு. காமராசர் சொல்லீருக்காரு, "நிதி இல்லைன்னு கவலைப்பட தேவை இல்ல. நான் பிச்சை எடுத்தாவது இத நடத்துவேன்".

மாசாமாசம் school fees கட்டாம "பிச்சை எடுத்தாவது என் பிள்ளைகள படிக்க வைப்பேன்"னு ஒரு குடும்ப தலைவன் dialogue விட்டா குடும்ப தலைவியால ஏத்துக்க முடியுமா? ஒரு சாதாரண ஆளு சொல்லலாம். ஆனா அத்தனை அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருக்ககூடிய ஒரு முதல்வர், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்குறத விட்டுட்டு உணர்ச்சி வசனம் பேசினா ஏதாவது பலன் இருக்குமா? இயலாமைய திசை திருப்புற செயல் தான அது.

எங்க தமிழ் ஆசான் (+1&2 yes he is a brahmin) ஒன்றை அடிக்கடி வலியுறுத்துவார். திறனாய்வு கட்டுரை எழுதும்போது கூட ஒரு விமர்சனத்த வச்சா அதுக்கான தீர்வ / மாற்று வழிய அதுல முன்வைக்கணும். இல்லைனா விமர்சனம் செய்யுறதுக்கான தகுதி கிடையாது. நாலு பேரு கூட படிக்காத இந்த கட்டுரைகள எழுதுற நானே விமர்சனங்கள் முதல் தொகுதினும் ; தீர்வுகள் இரண்டாம் தொகுதின்னு வகுத்துகிட்டேன்னா, முதல்வர் வேட்பாளர்கள் எப்படிபட்டவங்களா இருக்கணும்.

மதிய உணவு திட்டத்தாலதான் தமிழ் நாட்டுல எழுத்தறிவு எண்ணிக்கை அதிகமாச்சுனா, கேரளாவவிட நாம முன்னாடி தான இருக்கணும். சரி அத விடுங்க அறிவொளி இயக்கம்னு ஒன்னு தமிழ்நாட்டுல எதுக்கு வரணும்.

திராவிட கட்சிகள்னாலே பொதுவா செய்யுறது என்னனா, தனக்கு முன்னாடி ஒருத்தன் கொண்டுவந்த திட்டத்த முடக்குறது. இல்ல பேர மாத்தி வைக்குறது. ஆனா இந்த மதிய உணவு திட்டம் மட்டும் விதிவிலக்கு. காங்கிரஸ் காலத்துல நிதியே ஒதுக்கல ஆனா திரு. MGR காலத்துல அதிக நிதி ஒதுக்கபட்டது. கருணா மற்றும் ஜெயா காலத்துலயும் அதிக நிதி ஒதுக்கிருக்காங்க.

ஆனாலும் பாருங்க சமீபத்துல தி.மு.க. ஆட்சில ஒரு திட்டம் கொண்டுவந்தாங்க. முதல் தலைமுறை பட்டதாரிகள் படிக்க வந்தா, கல்வி கட்டணம் குறைவு. நியாயமா பாத்தா மதிய உணவு திட்டம் இடஒதுக்கீடு திட்டம் இப்படி எத்தனையோ திட்டங்கள செயல் படுத்தி இருக்க கூடிய தமிழ் நாட்டுல, முதல் தலை முறை பட்டதாரிகள் எண்ணிக்கை குறைவா தான இருக்கணும். ஏன் அப்படி இல்ல?

அப்படினா எங்கையோ கோளாறு இருக்குனு தான அர்த்தம்.

No comments:

Post a Comment