தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 6

தேசிய கட்சிகளின் அடையாளங்கள் என்ன? (காங்கிரஸ் ; பா.ஜ.க. இரண்டுக்கும் பொதுவானது)

சௌராஷ்டிரா சமுதாய ஓட்டுக்களை கவருவதற்காக மதுரையில் திரு. ராம் பாபு. சேலத்தில் திரு. குமாரமங்கலம் என்று பட்டியல் நீளும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை கலைக்க முடியும். மாநிலத்துக்கு தொடர்பே இல்லாத ஒருவரை ஆளுநராக நியமிக்க முடியும்.

தேர்தலில் நிற்காத ஒருவரை மாநில முதல்வர் அல்லது பிரதமராக நியமிக்க முடியும்.

தன் கட்சிக்காரர்கள் மீது ஊழல் வழக்குகள் இருந்தாலும்கூட ஊழல் ஒழிப்பு பத்தி வீராவேசமிட்டுகொண்டேஊழலில்  மாட்டிக்கொண்ட கட்சிகளோடு பேரம் பேசமுடியும் முடியும். 

தனக்கு வேண்டிய மாநிலத்து மீனவன் பாதிக்கபட்டால் இந்திய மீனவனுக்காக சர்வதேச நீதிமன்றம் வரை  செல்ல முடியும். பிடிக்காத மாநிலம் என்றால் தமிழக மீனவர்கள் பிரச்னை என்று குரல் மட்டும் கொடுக்க முடியும்.

பிரச்னை நல்லவிதமாக முடிந்தது என்றால் எங்களால் நடந்தது என்று மார் தட்ட முடியும். நடக்கவில்லை என்றால் அது மாநில அதிகாரத்து கீழ் வருகிறது என்று சொல்ல முடியும்.

எல்லா மாநிலத்து வரியையும் வாங்கிகொண்டு இந்தி மொழியை மட்டும் வளர்க்க முடியும். அது குறித்து கேள்வி எழுப்பினால், தெலுங்கு மொழி பேசுபவர்களும் தமிழக அரசுக்கு வரிகட்டுகிரார்கள், தமிழை மட்டும் இந்த அரசு வளர்ப்பது சரியா என்று கேள்வி எழுப்ப முடியும். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதே இவர்களுக்கு தெரியாது. 

ஆட்சியில் இல்லை என்றால் தமிழ் போல் ஒரு சிறந்த மொழி வேறு எதுவும் கிடையாது என்பார்கள். ஆட்சிக்கு வந்துவிட்டால் சமஸ்கிரதம் சிறந்த மொழி என்பார்கள். இந்தியர்கள் அனைவரும் இந்தியை படிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

கூட்டணில இல்லைனா நாட்டின் பிரதமரை கொன்ற கட்சியோட ஒட்டுரவே இல்லைன்னு பேசமுடியும். கூட்டணில இருந்தா பழம் பெரும் அரசியல்வாதியோட சேர்ந்ததுல மகிழ்ச்சின்னு பல்லிளிக்க முடியும்.ஒத்துவராத எதிர்க்கட்சிய உடைச்சு தன் கட்சியோட சேர்ந்துட்டதா அறிவிப்பு வெளியிடலாம்.


எல்லைக்கு இந்தப்புறம் இருந்தால் காவேரி முல்லைப்பெரியாறு கிருஷ்ணா என்று எல்லா  விடயங்களிலும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று பேச முடியும். எல்லைக்கு அந்தப்புரம் போனதும், மற்ற மாநிலங்களுக்கு ஆதரவாக பேசமுடியும்.

தேசிய அளவிலே ஜனதா கட்சி என்ற ஒன்று சிறப்பாக வளர்ந்து வந்தது சரத் யாதவ் போன்ற சில சுயநலம் கொண்டவர்களால் அது நலிவடைந்தது. ராமகிருஷ்ண ஹெக்டே போன்ற சிறந்தவர்கள் ஓரம் கட்டபட்டார்கள். இவ்வாறாக  முயற்சிகள் கைகூடாமலே போனது நாட்டின் அவலம். 

No comments:

Post a Comment