தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 5

இந்திய துணைக்கண்டம் முழுவதுமே பல மன்னர்கள் சிறப்பான ஆட்சி செய்துவந்துள்ளார்கள். கடல் கடந்து, உலகில் பல இடங்களில், தன் ஆட்சியை நிலைநாட்டி இருக்குகிறார் சோழ மன்னர். மன்னர் ஆட்சி நடக்கும் போதே "குடவோலை" முறை என்று மக்கள் ஆட்சியை அறிமுகபடுத்தியவர்களை பார்த்து, உங்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது, நாங்கள் உங்களுக்கு கற்று கொடுக்குறோம் என்று வெளியில் இருந்து மறைமுக ஆட்சி செய்துவந்தான் ஆங்கிலேயன்.

நாடு விடுதலை அடைந்துவிட்டது என்று பிரகடனபடுத்தினாலும் கூட, 1956 வரை இங்கிலாந்தின் அரச குடும்பத்தின் அனுமதி கோரி கடிதம் எழுதி ஆட்சி செய்துவந்தார். அதுவும் ஒவ்வொரு கடிதத்திலும், "உங்கள் கீழ்படிதல் உள்ளவன்" என்கிற முகவுரையோடு. இது எவ்வளவு பெரிய அவமானம் நமக்கு.

"நாங்கள் சட்டத்தை உடைக்க போகிறோம்" என்ற தேர்தல் கோஷத்தோடு வெற்றிபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியானது, ஆங்கில ஆட்சியில் இருந்து எந்த வகையிலும் மாறுபட்டதாக இருக்கவில்லை. நேருவின் பிரதி பிம்பமாக தமிழகத்தில் ஆட்சி செய்த தமிழக முதல்வர் திரு. காமராஜ் நாடார் அவர்கள் (திராவிட கட்சியோடு ஏற்ப்பட்ட சகவாச தோஷத்தால்) தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற காரணத்துக்காக, அந்தந்த தொகுதியில் எந்த சமுதாயம் பெரும்பான்மை என்று பார்த்து வேட்பாளர்களாக நிறுத்தினார். 

ஆனால் forward block கட்சியானது, அந்தந்த தொகுதியில் யார் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று பார்த்து வேட்பாளர்களாக நிறுத்தியது. வகை மாதிரிக்கு சொல்வதென்றால் கோவை பகுதியில் திரு. G.D. நாயுடு அவர்கள் ; அருப்புகோட்டை பகுதியில் திரு. M.D. ராமசாமி செட்டியார். இன்றும் மாநிலம் முழுவதும் தேவாங்கர் மேல்நிலை பள்ளிகள் பல உள்ளன. அவற்றில் பெரும்பாலும் இவருடைய புகைப்படம் இருக்கும்.


ஒரு இடைதேர்தலில் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய, அந்த தொகுதியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினார். அதேவேளையில் forward பிளாக் கட்சியின் சார்பாக திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள்,  பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்தாமல்   வேறொருவரை நிறுத்தினார். ஆட்சி அதிகாரத்தின் துணை கொண்டு எவ்வளோவோ முயற்சித்தும் காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. இவ்வாறு பல நிகழ்வுகள்...

திரு. சத்த்யமூர்த்த்தி அவர்களை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு வளர்ந்துவிட்டு ; முதல்வர் ஆக வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, ஆரிய திராவிட  பிரிவினை வாதம் செய்தது முதல் பச்சை தமிழர் அடையாளம் பூண்டது ஒரு கட்டம்.  

விருதுநகர் தேர்தலில் தோற்கும் வரை பச்சை தமிழன் என்று பேசிவிட்டு, சட்டசபை தேர்தலில் தோற்றதற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும் போது பேருக்கு பின்னால் நாடார் என்று அடையாளத்தை அணிந்து கொண்டு, "இது நாடாளுமன்ற வெற்றி கிடையாது நாடார்களின் வெற்றி" என்றுகேவலம், கலைஞர் சொல்லும் அளவுக்கு தாழ்ந்துவிட்டது அடுத்த கட்டம்.

அன்று வீழ்த்த கட்சி கட்சி இன்றுவரை தமிழகத்தில் எழ முடியவில்லை. "Fact of the matter is" என்ற சொற் தொடரை அதிகம் பயன்படுத்தியவர் என்ற விருதுக்கு தகுதியான திருமதி. ஜெயந்தி நடராஜன் அவர்கள் அண்மைக்காலத்தில் ராகுல் காந்தி குறித்து விமர்சனங்கள் வைத்தார்.  அவ்வளவு தான் அவருடைய தத்தா பற்றிய facts அனைத்தும் வெளிவந்துவிட்டது, இன்றைய மாநில தலைவர் வாயில் இருந்தே

கல்லூரியல் இரண்டாம் ஆண்டு போன புதிதில் ஒரு நாள் காலை உணவு அருந்திக்கொண்டு இருந்தபொழுது என் சக வகுப்பு மாணவன் ஒருவன் என்னிடம் வந்தான் " .மச்சி நான் தான் கிளாஸ் ரெப்பா வரணும்னு எல்லாரும் பிரியபடுறாங்க. நீ என்ன நினைக்குற"  பதவிக்கு வரத்துடிக்கும் ஒவ்வொருவரும் இந்த வாசத்தை அல்லது யுக்க்தியை தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.இதனை தமிழகத்துக்கு அறிமுகபடுத்தி வைத்தவர்    யார் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

திரு. முத்துராமலிங்க தேவரின் மறைவுக்கு பின், நெருக்கடி நிலையை பிரகடன படுத்திய இந்திரா காந்தியை ஆதரித்து மாபெரும் அரசியல் பிழையை forward block கட்சி செய்தது...

No comments:

Post a Comment