தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 3

நாட்டின் விடுதலைக்கு போராடிய காலத்தில், காந்தியின் கொள்கைகளில் முரண்பாடு கொண்ட பெரியவர்கள் தனி கட்சி துவங்கி சிறப்பான செயல்கள் செய்தார்கள். அவர்களின் நெருக்கடி மற்றும் இங்கிலாந்துக்கு உலகப்போரின் முடிவில் ஏற்ப்பட்ட நெருக்கடிகளாலும் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் குறைப்பிரசவ குழந்தைக்கு கவனம் அதிகம் தேவை. அதனை உணராத நேருவின் ஆட்சி பற்றி, காங்கிரசை தென் இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்களே விமர்சனங்கள் வைத்தார்கள். ஆட்சி குறித்த விமர்சனங்களை தனி மனித தாக்குதலாக கருதிய, பண்படாத நேரு, எதிர்கட்சிகளை உடைக்க துவங்கினார்.

இதே காலகட்டத்தில் திரிவடுக கட்சியானது பிரிவினைவாதம் பேசியது. ஆங்கிலேயனை தொடர்ந்து நம்மையும் நாட்டை விட்டு விரட்டிவிடுவார்களோ என்ற சந்தேகத்தின் காரணமாக வட நாட்டவர்களை வில்லன்களாக சித்தரித்தார்கள். ஆரிய திராவிட பிரிவினைவாதம் பேசினார்கள். இந்தி மொழி திராவிட மொழி என்று பேசினார்கள். கன்னட ; மலையாள மொழி பேசுபவர்களிடம் அது எடுபடாது போகவே, தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசி தங்களை தமிழர்களாக அடையாள படுத்தி கொண்டார்கள் .

நேருவின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்த காரணத்தால் தமிழக காங்கிரசின் மீது இருந்த நம்பிக்கை மக்களுக்கு குறைய துவங்கியது. அது சமயம் பெரியவர்கள் பலரும் மறைந்துவிட்டார்கள். இதனை சாதகமாக வைத்து மாற்று கட்சி என்கிற மாயையை வைத்து ஆட்சிக்கு வந்தார்கள்.

No comments:

Post a Comment