தமிழ் சினிமா பகுதி I

வேற எந்த ஊர்லயும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டுல சினிமா மோகம் அதிகம் இருக்கு. வரிசையா சினிமாக்காரனும் சினிமாகாரியும் தான் ஆளுறாங்க. ஆனா பணம் கொடுத்து படம் பார்க்கவர்ற தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் சினிமா நேர்மையா இருக்கா..

சினிமான்னு இங்க சொன்னாலும், சினிமா மட்டுமில்லாம அரசியல் இயக்கங்கள் அப்படீன்னு சொல்லி திரியும் போலி இயக்கங்கள் ; பத்திரிக்கைகள் ; தொலைகாட்சி தொடர்கள் ; நிகழ்ச்சிகள் ; விளம்பரங்கள் செய்யும் தமிழின அழிப்புக்கு சில இலக்கணம் உண்டு அதன் பட்டியல் இங்கே.





1992 இல் வெளிவந்த தேவர் மகன் ; 2004 இல் வெளிவந்த விருமாண்டி. முதல்ல இந்த இரண்டு படங்கள்ல இருந்து ஆரம்பிக்கலாம். ஏன்னா ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுற மாதிரி ஆரிய திராவிட நபர்களால் இயக்கப்படும் தமிழ் சினிமா / பத்திரிக்கைகள் செய்துவரும் தமிழ் இன எதிர்ப்பு வேலைகளுக்கு இந்த இரண்டு படங்களும் நல்ல எடுத்துக்காட்டா இருக்கு. 

நகரத்தில் இருப்பவர்களை காட்டிலும் கிராமத்தில் வசிக்கும் மண்ணின் மைந்தர்கலான தமிழர்களுக்கு தான் தமிழ் சினிமா அதிக பாடம் எடுத்திருக்கு.

முதல் பாடம் என்னனா, குடி பெயர்தல் / இடம் பெயர்தலை (நகரமயமாக்கல்) ஊக்குவிக்கனும். பிறந்த ஊரையும் ; சொந்தக்காரர்களையும் (இத சாதி சனம்னும் சொல்லலாம்) பிரிந்து அசலூர்ல சில வருடங்கள் கண்டிப்பா இருக்கணும். முடிஞ்சா மொத்தமா அசலூர்ல போய் அங்கேயே தங்கிடனும். [தன் சமூகத்தில் இருந்து பிரிந்து, தான் மட்டும் தனித்துவத்தோடு இருத்தல் என்ற நிலை.]

தேவர் மகன் படத்துல, அசலூருக்கு போய் படிச்சிட்டு வந்த கமலஹாசன் எல்லாத்தையும் அறிவுப்பூர்வமா யோசிப்பாரு. ஆனா அந்த ஊருலயே இருக்க மத்தவங்க எல்லாரும் அதிக உணர்ச்சிவயப்படுபவர்கலாகவும் ; பழிக்கு பழி வாங்க துடிப்பவர்கலாகவும் ; எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். விதிவிலக்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாபாத்திரம் ;  உணர்ச்சிப்பூர்வமா மட்டும் இல்லாம தொலைநோக்கு பார்வை கொண்டு அனைவரையும் அரவணைத்து செல்பவரா இருப்பாரு.

விருமாண்டி படத்துல, கமல் அசலூருக்கு போய் வேலைபாத்துட்டு வந்திருப்பாப்புல. அதனால தப்பு செஞ்சா, குற்ற உணர்ச்சி கொண்டவரா காட்டீருப்பாங்க. இந்த படத்துல தமிழை தாய்மொழியாக கொண்ட உள்ளூர்காரர்கள் எல்லாரும் (காவல் துறை அதிகாரி உட்பட), காட்டுமிராண்டிகளாகவும் ; பொய் சொல்பவர்களாகவும் ; சொத்துக்காக துரோகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். தெலுங்கை தாய்மொழியாக கொண்டு அசலூரில் இருந்து வந்து இங்கே குடியேறிய திராவிடரும் அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாரும் தர்மத்தின் தலைவர்களா நடந்துப்பாங்க. விதிவிலக்கா தமிழர்கள் தரப்புல, அபிராமி கதாபாத்திரம் தன்மையா  நடந்துக்கும். (ஏன்னா அந்த கதாபாத்திரம் தன் சொந்தபந்தகளிடம் இருந்து எப்பவுமே விலகியே இருக்கும்)


இரெண்டாவது பாடம் என்னனா, நமக்கு தெரியாத ஒரு மொழிய நம்ம எதிராளி நம்மகிட்ட பேசினா ; அந்த மொழிய கத்துகிட்டு திரும்ப அவன் கிட்ட திருப்பி பேசுறத பெரிய கெத்தா நினைக்கணும். 

தேவர் மகன் படத்துல வம்புக்கு மதன் பாப் ஆங்கிலத்துல  பேசுவாப்ள, அப்ப கமல் திரும்ப துறை மாதிரி ஆங்கிலத்துல பேசுவாப்ல. அப்படினா ஆங்கிலமே தெரியாத ஒருத்தன் அந்த நேரத்துல எப்படி கையாளுவான்? ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த "English Vinglish" படமும் அந்த வகையறா தான். இன்னமும் இங்கிலீஷ்காரன் முன்னாடி நல்லா இங்கிலீஷ் பேசிட்டா அதுல ஒரு பெருமை. அவன் நம்ம மொழிய பேசி பெருமபட்டிருக்கானா? எப்பவுமே இந்த அடிமை எண்னத்த தான் இவர்கள் விதைப்பார்கள்.

தேவர் மகன் படத்துல இன்னொரு தேவை இல்லாத வசனம் வரும். "சரியான கள்ளனையா நீர்" "இல்ல நான் மறவன்". சாதிகளாக மட்டும் இல்ல உட்பிரிவுகளாகவும் தமிழன் பிரிந்து கிடந்தால் தான் ஆரிய திராவிடர்களுக்கு பொழப்பு ஓடும்.


தேவர் மகன் படத்தோட இயக்குனர் பரதன் யாரு ? ஆவாரம்பூனு படம் எடுத்திருக்காரு. அவரு ஒரு மலையாள மொழி பேசும் திராவிடர். இளவட்டமா இருக்கும் போது வேலைவெட்டி இல்லாம பொள்ளாச்சில இருக்கும் போது ஒரு தமிழ் பொண்ண தறுதலையா காதலிச்சிருக்காரு. அது கைகூடல. அந்த உள்ளநோக்கத்தால இப்படி படம் எடுத்திருக்காரு.


மூணாவது பாடம் என்னனா, மனித உரிமைகள் பத்தி தெரிஞ்சுக்கணும்னா ; விலங்குகள் மீது நமக்கு பாசம் இருக்கணும்னா நாம ப்ளூ க்ராஸ்ல  சேரனும் இல்லைனா கிருத்தவனா இருக்கணும்.

ஏர் தழுவுதல் அப்படினா என்ன அது எதுக்காக நடத்துறாங்க எதைபத்தியும் முழுசா தெரிஞ்சுக்க கூடாது. ஜல்லிக்கட்டு அது ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு. மிருகத்த வதம் செய்யுறாங்க அப்படீன்னு கூச்சல் போடணும். (விருமாண்டி படத்துல நடிகை ரோகினியோட கதாபாத்திரத்தோட பேர யோசிச்சு பாருங்க)






தமிழர்களின் மன நிலைக்கும் வரலாற்று பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பில்லாதவற்றை, தமிழர்களின் இயல்பாக சித்தரித்தல் (கண்மாய் உடைத்தல் வைக்கோல் போருக்கு தீ வைத்தல்)

சிற்றூர்களில் வசிப்பவர்கள் அவர்களுக்கிடையில் சண்டை என்றால் என்னென்ன செய்வார்கள் என்று தமிழில் வெளிவந்துள்ள திரைப்படங்கள்  உண்மைக்கு புறம்பான நியாயமற்ற ஒரு தவறான பிம்பத்தை கட்டமைத்துள்ளன. குளம் ; குட்டை ; கண்மாய் போன்றவற்றை  உடைப்பவர்கலாக அல்லது விவசாய விலை பொருட்களுக்கு தீ வைப்பவர்களாக சித்தரித்திருப்பார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஒரு சம்சாரியின் வைக்கோல் படப்பில் எதிர்பாராத விபத்தின் காரணமாக தீ பிடித்தால், அந்த சம்சாரியின் வீட்டை ஒரு துக்கம் நடந்த வீடாக கருதி, வெளியூர்களில் இருப்பவர்கள் கூட வந்து துக்கம் விசாரிப்பதையும் ; ஆதரவாக இருப்பதையும் கடமையாக கருதியவர்கள் தமிழர்கள். திருமணத்துக்கு போகமுடியாவிட்டாலும் பரவா இல்லை துக்க வீட்டுக்கு கேதம் கேட்க கண்டிப்பாக போகவேண்டும் என்று சொல்லி வளர்ப்பார்கள். 

வெறுப்பை உமிழ்ந்த பாரதி கண்ணம்மா என்ற திரைப்படம் வெளியான பிற்ப்பாடு அந்த திரைப்படத்தை ஒட்டி சாதிய மோதல்கள் நடந்து பலபேருடைய உயிர் பறிபோனது. அதன் காரணமாக இயக்குனர் சேரன் மீது பலருக்கும் என்றைக்குமே வெறுப்பு உண்டு. இருந்தாலும் கூட சேரனுடைய மகள் காதல் விவகாரத்தில் ஒரு கயவனிடம் சிக்கியபோது, அந்த பெண் மீண்டுவந்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைத்தனர் பாதிக்கப்பட்டவர்கள். இது தான் தமிழர்களின் வழக்கம். தீங்கை விளைவித்தவனுக்கு துன்பம் நேரும்போது அவனுக்காக வருந்துவது தமிழனின் இயல்பு.

தொடரும்...

No comments:

Post a Comment