ஏமாறாதே ஏமாற்றாதே...



இன்றும் பலபேரை பார்க்கிறோம் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். ஒருகட்டத்தில் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். இருவருமே தொழில் தெரிந்தவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை. பல நேரங்களில் அப்படி இருப்பதில்லை. 

"மச்சான் இந்த தொழில் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. உன்ன நம்பித்தான் பணத்த போடுறேன். நீ தான் பாத்துக்கணும்." 

"கவலைப்படாத மச்சி பதினஞ்சு வருசத்துக்கு மேல இந்த தொழில்ல இருக்கேன். எல்லா நெளிவு சுழிவும் எனக்கு தெரியும். நட்டம் வருமேன்னு பயப்பட்டா லாபத்த பாக்கமுடியாது."

இப்படி ஆரம்பிக்குற பல தொழில்களும் கடைசில எப்படி முடியுது?  சினிமா மாதிரி தான் முடியுது. சினிமா தயாரிப்பாளர்கள் மனசுல என்ன இருக்கு. போட்ட முதல் திரும்ப வரணும். பிரஸ் மீட்ல இயக்குனர் இப்படி சொல்லுவாரு, "இந்த மாதிரி ஒரு தயாரிப்பாளர் கிடைக்க நான் குடுத்துவச்சிருக்கணும். எந்த குறுக்கீடும் இல்லாம எங்க வேலைய செய்யவிட்டாறு. அதனால தான் இந்த படம் இவ்வளோ சிறப்பா வந்திருக்கு."

படம் வெற்றினா அது இயக்குனரையும் நடிகரையும் சேரும். தோல்வினா, அடுத்த பிரஸ் மீட்ல இப்படி சொல்லுவாங்க. "நான் எதிர்பார்த்த மாதிரி படம் பண்ண முடியல சார். நானும் தயாரிப்பாளர் தான்னு சொல்லீட்டு மஞ்சப்பைல பணத்த தூக்கிட்டு வர்றாங்க. ஒரு மண்ணும் புரியாதவங்களா இருக்காங்க. எல்லாத்துலையும் மூக்க நுழைச்சா எப்படி. நான் எதிர்பார்த்த பட்ஜெட்ல படம் எடுக்கு முடியல. எவ்வளோ காம்ப்ரமைஸ் செஞ்சுகிட்டேன்."


சினிமா வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல: நடிகர் கமலஹாசன்.
ஐம்பது வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் இருக்க கூடியவர் ; ஓடும் படங்களை சொந்த பணத்திலும் ஓடாத படங்களை ஊரான் பணத்திலும் எடுப்பவர். இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சரி ஒண்ணா சேர்ந்து தொழில் செஞ்ச நண்பர்கள் கதைக்கு வருவோம். தொழில் நல்லா போச்சுன்னா நல்லது. இல்லைனா என்ன நடக்குது.

"என்ன மச்சான் உன்ன நம்பித்தான் முதல் போட்டேன் இப்ப என்ன செய்யுறது?"

"மச்சி நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காத. தொழில்னா லாபம் நட்டம் மாறி மாறி தான் வரும். இன்னும் அதிக பணம் போடு. விட்டத எடுத்துடலாம்."

முதலீட்டாளார்களுக்கு :

பலபேரு நிர்வகிக்குற பங்கு வர்த்தகத்துல பணத்த போட்டாலும் சரி; நெருங்கிய நண்பனோட தொழில்ல பணத்த போட்டாலும் சரி, due diligence என்று சொல்லப்படும் சாதக பாதகங்களை அலசிப்பார்க்கும் வேலைய ஆரமத்துல இருந்து ஒவ்வொரு கட்டத்துளையும் சரியா செய்யணும். அதுக்கு தொழில் தெரிஞ்சிருக்கனும்கிறது அவசியம் இல்ல.

அடுத்தவர்கள் முதலீட்டில் தொழில் செய்பவர்களுக்கு : 

பத்துவருசத்துக்கு மேல ஒரு தொழில்ல இருக்க உங்களால தோல்விய முன்கூட்டியே கணிக்க முடியலைனா. நீங்க திறமைசாலி இல்லைன்னு அர்த்தம். தொழில சரியா கத்துக்குரதுல ; தொழில் செய்யுறதுல திறமை இல்ல உங்களுக்கு. 

இல்ல நான் திறமையானவன் தான். இந்த முறை சருக்கிடுச்சுனு சொன்னீங்கன்னா. உங்களுக்கு மலையாளத்துல ஒரு வார்த்தை சொல்லுறேன்.  "மட்டுல்லோரே பட்டிகருது மாஷே..." பட்டிக்காட்டான் மஞ்சப்பை

No comments:

Post a Comment