ஒரு ஊருல ரெண்டு ராஜா

தொழிற் சங்க பேச்சுவார்த்தை என்றாலே அது ஊதியம் அல்லது போனஸ் தொடர்பானதாக மட்டுமே பரவலாக பார்க்கப்படும் காலத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து சிந்திப்பதற்கு பலருக்கும் நேரமிருக்காது.

ஒரு கமர்சியல் திரைப்படத்தில், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சூழல் குறித்து படம் எடுத்ததற்காக இயக்குனருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.



"எட்டு மணிக்கு மேல வெடிவெடிக்க கூடாது பத்து மணிக்கு மேல ஒலிபெருக்கி பயன்படுத்தகூடாதுன்னு இப்ப தான் நாம L.K.G. லெவெல்ல இருக்கோம்." என்று இந்த படத்தில் வரும் வசனம் தற்கால நிலையை எடுத்து காட்டுகிறது.

இந்தியாவில் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து அதிகாரபூர்வமாக 1962 இல் சிந்தித்து 1966 முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கும் வழக்கத்தை பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு  துவங்குவதற்கு பலவருடங்களுக்கு 
முன்னமே  இந்தியாவில் இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அலுவல் நிமித்தமாக பல தொழிற்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்பவன் 
என்ற முறையில் நான் கண்டது என்னவென்றால்,பல நல்ல சட்டங்கள் 
நடைமுரைப்படுத்தபடாமல் துருபிடித்து கிடக்கிறது. இன்னமும் முதலாளியின் 
கருணையில் தான் தொழிலார்களின் உரிமை அடங்கி இருக்கிறது.

நடிகர் சூரிக்கு இது ஒரு நல்ல படம். ஒரு படத்தில் போட்ட முதல் திரும்ப 
வேண்டும் என்றால் ஒரு கதாநாயகி என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று 
சினிமா இலக்கணம் வகுத்திருக்கிறதோ அதை எல்லாம் செய்துவிட்டு நடிக்கவும் 
செய்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.

இயக்குனர் அல்லது வசனகர்த்தா தன்னுடைய அரிப்பை தீர்த்துக் கொள்வதற்காக 
சுடலைமாட சாமியை வம்புக்கு இழுத்திருந்தாலும், முதலாளிக்கு பொட்டு 
வைத்திருந்தாலும் கூட, ஆகச்சிறந்த படம் என்று சொல்லும் அளவில் இல்லை 
என்றாலும் கூட இன்று இருக்கும் நிலைமையை படம் பிடித்து 
காட்டியதோடு இல்லாமல் எப்படி இருக்கவேண்டும் என்றும் லேசாக கோடிட்டு 
காட்டியவகையில் இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment