கர்ணன்





"படம் வெளியாகி 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாகிறது. தவிரவும் சோகமான முடிவை கொண்ட படம் வேறு. பெரும்பாலும் வயதானவர்கள் தான் வருவார்கள். இந்த படத்துக்கு வரும் இளவட்டங்கள் என்னைப்போல சிலராகத்தான் இருப்பார்கள். அப்படி வரக்கூடிய சில இளவட்டங்களும் பல காட்ச்சிகளில் கலைப்பார்கள்.", வெள்ளிக்கிழமை சத்யம் திரை அரங்கத்துக்கு போகும் போது என் மனதில் தோன்றிய எண்ணம் இது தான். ஆனால் திரை அரங்க வளாகத்தில் ஆச்சர்ய அதிர்ச்சி காத்திருந்தது.

முன்பதிவு செய்து படம்பார்க்கவந்தவர்கள் ஒரு நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். அதை தவிர்த்து கடைசி நேரத்தில் ticket கிடைக்குமா என்று வந்து ஏமாந்து போனவர்களும் அதிகம் தான். ஏதோ இன்று தான் படம் ரிலீஸ் ஆவது போல, சிவாஜி கணேசன் திரையில் தோன்றியதும் கலர் கலராக காகித துண்டுகள் போடப்பட்டன. சிவாஜி கணேசனுடைய வீர நடைக்கு ; தளர்ந்த நடைக்கு ; வசன உச்சரிப்புக்கு கிண்டல் வசனத்துக்கு ; NTR இன் நடிப்புக்கு ; அசோகன் அவர்களின் நடிப்புக்கு என்று கைதட்டல்கள் பலமாக இருந்தன. படம் பார்க்க வந்திருந்தவர்களில் 40 விழுக்காடு பெரியவர்களும் குடுமத்தோடு வந்திருந்தவர்களும் தான். மீதம் பேர் இளவட்டங்கள்.

பொதுவாக இன்றைய திரைப்படங்களில் வரக்கூடிய பாடல்களுக்கு பலர் தம் அடிப்பதற்கு சென்றுவிடுவார்கள். ஆனால் காட்ச்சிகளுக்கு இணையான பாடல்கள் கொண்ட இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தான் பலர் தம் அடிக்கபோனார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த படம் எடுக்க எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. படத்தை மெருகேற்ற 40 லட்ச்சங்கள் ஆனதென்று சொல்கிறார்கள். இன்றைக்கு Computer Graphics மற்றும் அதிநுட்ப கருவிகள் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால் அன்று இருந்த தொழில் நுட்ட்பத்தை வைத்து அவர்கள் காட்டியிருக்கும் பிரம்பாண்டம் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது.



18 மார்ச் 






மறு வெளியீடா இந்த படம் திரைக்கு வந்து நாப்பது நாள் ஆகபோகுது. இதுக்கு ஊடால, நெறையா படம் வெளிவந்துச்சு. அதுல எத்தன ஓடுது எத்தன படத்த ஓட்டுறாங்க எத்தன படம் திரையரங்கத்த விட்டு ஓடிருச்சு?

ஒருவேள "ஒட்டுராங்கலோன்னு" பாத்தேன். ஆனா சத்யத்துல மாலை காட்ச்சிகள் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்த காட்ச்சிகலாத்தான் இருக்கு.



20 ஏப்ரல், 12:40 க்கு

No comments:

Post a Comment