மரீனா





அருப்புகோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது எட்டாம் வகுப்பு வரை வருடம் ஒரு முறை படம் பார்க்க திரை அரங்கம் கூட்டி செல்வார்கள். அன்றைய கோமதி திரை அரங்கத்தில் சிறுவர்களுக்கான படத்தை திரையிடுவார்கள். கல்வி சுற்றுல்லா என்று அறியப்படும் இன்ப சுற்றுல்லா கூட அனைவராலும் போக இயலாது. தவிரவும் சென்று வந்த பின்னர், நீவீர் சென்று வந்த இன்ப சுற்றுல்லா குறித்து ஒரு பக்கத்துக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைக என்று சொல்லி துன்ப சுற்றுல்லா ஆக்கிவிடுவார்கள். ஆனால் திரை அரங்கத்துக்கு செல்லும்போது அந்த பிரச்சனைகள் கிடையாது.

இப்பொழுது அந்த பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் மரீனா திரைப்படத்துக்கு அழைத்து செல்லலாம். படம் மரண மொக்கை என்று பலர் சொன்னார்கள். பசங்க அளவுக்கு இல்லை என்றபோதிலும் எனக்கு இந்த திரைப்படம் பிடித்திருக்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் அடுத்த முறை சிறுவர்களுக்கான படம் எடுக்கும்போது வேறொரு களத்தை தேர்ந்தெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக நடிகர்கள் மீது உள்ள மோகத்தில் ஊரைவிட்டு சென்னை நோக்கி வரும் சிறுவர்கள் படும் இன்னல்களை கருவாக எடுத்தால் நன்றாக இருக்கும்.

இயக்குனர் பாண்டிராஜின் முயற்ச்சிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.



6 மார்ச் posted in Facebook

No comments:

Post a Comment